பகுதி – அ (தமிழ் தகுதி & மதிப்பீட்டுத் தேர்வு)
Part-A (Tamil Eligibility-Cum-Scoring Test)
வினாக்கள் : 1-100 மொத்த மதிப்பெண்கள் : 150
Questions : 1-100 Total Marks : 150
ஆதாரம்: http://www.jaihindiasacademy.com/category/books/
1. பொது தமிழ் Syllabuswise – NEW SYLLABUS 2022
2. 6th to 12th பொது தமிழ் சுருக்கம் – OLD BOOK
3. 6th to 10th பொது தமிழ் சுருக்கம் – NEW BOOK
4. TNPSC UNIT 8 தமிழ் சமுதாய வரலாறு மற்றும் பண்பாடு – ONLY TAMIL MEDIUM
5. நவீன தமிழ் எழுத்தாளர்கள்
6. G2 & G4, VAO பொது தமிழ் (21 PREVIOUS YEAR QUESTION BANK)
1. மரபு பிழைகள் அற்ற தொடரைக் குறிப்பிடுக.
(A) கூகை கூவும்
(B) கூகை குனுகும்
(C) கூகை குழறும்
(D) கூகை அலறும்
(E) விடை தெரியவில்லை
ஆதாரம்: JAI HIND IAS ACADEMY TAMIL BOOK PAGE No. 27
பறவை எழுப்பும் ஒலி:
1. ஆந்தை அலறும்
2. காகம் கரையும்
3. கிளி கொஞ்சும் / பேசும்
4. குயில் கூவும்
5. குருவி கீச்சிடும்
6. கூகை குழறும்
7. கோட்டான் குழறும்
8. சேவல் கூவும்
9. கோழி கொக்கரிக்கும்
10. புறா குனுகும்
11. மயில் அகவும்
12. வண்டு முரலும்
13. வாத்து கத்தும்
14. வானம்பாடி பாடும்
2. சந்திப்பிழையற்ற தொடரைக் கண்டறிக.
(A) வேலை வாய்ப்புகளில் கணிசமான மாற்றங்களை செயற்கை நுண்ணறிவு
கொண்டுவரபோகிறது
(B) வேலை வாய்ப்புகளில் கணிசமான மாற்றங்களைச் செயற்கை நுண்ணறிவு கொண்டுவரபோகிறது
(C) வேலை வாய்ப்புகளில் கணிசமான மாற்றங்களை செயற்கை நுண்ணறிவு கொண்டுவரப்போகிறது
(D) வேலை வாய்ப்புகளில் கணிசமான மாற்றங்களைச் செயற்கை நுண்ணறிவு
கொண்டுவரப்போகிறது
(E) விடை தெரியவில்லை
3. குற்றியலுகரம் அடிப்படையில் பொருந்தாச் சொல் கண்டறிக.
(A) சார்பு
(B) மருந்து
(C) கஃசு
(D) பசு
(E) விடை தெரியவில்லை
4. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.
(A) மோனை
(B) எதுகை
(C) இசைவு
(D) இயைபு
(E) விடை தெரியவில்லை
ஆதாரம்: JAI HIND IAS ACADEMY TAMIL BOOK PAGE No. 56 to 58
TOPIC 20. எதுகை மோனை இயைபு இவற்றுள் ஏதுனும் ஒன்றைத் தேர்ந்தெழுதுதல்
5. கூற்று 1: ஏரெழுபது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று
கூற்று 2 : ஏரெழுபதைப் பாடியவர் கம்பர்
(A) கூற்று 1 மட்டும் சரி
(B) கூற்று 2 மட்டும் சரி
(C) கூற்று 1ம் கூற்று 2ம் சரி
(D) கூற்று 1ம் கூற்று 2ம் கவறு
(E) விடை தெரியவில்லை
ஆதாரம் 1: JAI HIND IAS ACADEMY TAMIL BOOK PAGE No. 120
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்
- நாலடியார்
- நான்மணிக்கடிகை
- இன்னா நாற்பது
- இனியவை நாற்பது
- திருக்குறள்
- திரிகடுகம்
- ஆசாரக்கோவை
- பழமொழி நானூறு
- சிறுபஞ்சமூலம்
- முதுமொழிக் காஞ்சி
- ஏலாதி
- கார் நாற்பது
- ஐந்திணை ஐம்பது
- ஐந்திணை எழுபது
- திணைமொழி ஐம்பது
- திணைமாலை நூற்றைம்பது
- கைந்நிலை, இன்னிலை
- களவழி நாற்பது
ஆதாரம் 2: JAI HIND IAS ACADEMY TAMIL TEST SERIES
Q 7. இவற்றில் கம்பர் இயற்றாத நூல் எது?
அ) ஏரெழுபது
ஆ) மூவருலா
இ) சரசுவதி அந்தாதி
ஈ) திருக்கை வழக்கம்
உ) விடை தெரியவில்லை
6. ‘யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்’ என்று புகழ்ந்து கூறியவர் யார்?
(A) வாணிதாசன்
(B) பாரதிதாசன்
(C) சுரதா
(D) பாரதியார்
(E) விடை தெரியவில்லை
ஆதாரம் 1: JAI HIND IAS ACADEMY TAMIL BOOK PAGE No. 165
சிலப்பதிகாரம் சிறப்புகள்:
- “நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்” என பாரதியார் கூறுகிறார்.
- “சிலபதிகாரச் செய்யுளைக் கருதியும்……. . தமிழ்ச் சாதியை அமரத்தன்மை வாய்ந்தது என்று உறுதி கொண்டிருந்தேன்” என கூறுகிறார் பாரதியார்.
- “யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் வள்ளுவனைப் போல் இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கணமே பிறந்ததில்லை” என்றார் பாரதியார்
- “முதன் முதலாகத் தமிழ் மக்கள் எல்லோரையும் ஒருங்கே காணும் நெறியில் நின்று நூல் செய்தவர் இளங்கோவடிகள்” – மு. வரதராசனார்
- பாவின் வளர்ச்சிக்கு வித்திட்ட நூல் சிலப்பதிகாரம்
ஆதாரம் 2: JAI HIND IAS ACADEMY TAMIL TEST SERIES கம்பராமாயணம்
13. பாரதியார் கம்பரை இவ்வாறு புகழ்ந்தார்
அ) விருத்தமெனும் ஒண்பாவிற்கு உயர்கம்பன்
ஆ) யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்
இ) கல்வியிற் பெரியர்கம்பர்
ஈ) கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்
உ) விடை தெரியவில்லை
7. ‘மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனின் கற்றோன் சிறப்புடையன்’ – இப்பாடல் வரிகள் இடம்பெற்ற நூல்
(A) ஆத்திச்சூடி
(B) கொன்றை வேந்தன்
(C) நல்வழி
(D) மூதுரை
(E) விடை தெரியவில்லை
ஆதாரம் : JAI HIND IAS ACADEMY TAMIL பொதுத்தமிழ் – பயிற்சி BOOK PAGE No. 39
ஆறாம் வகுப்பு – இரண்டாம் பருவம்
கண்ணெனத் தகும் > 1. 1. மூதுரை
மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்ன்னின் கற்றோன் சிறப்புடையன் – மன்னற்குத்
தன்தேசம் அல்லாமல் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு
– ஔவையார்
நூல் வெளி :
இந்நூலின் ஆசிரியர் ஔவையார். இவர் ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நல்வழி போன்ற நூல்களையும் இயற்றியுள்ளார். மூதுரை என்னும் சொல்லுக்கு மூத்தோர் கூறும் அறிவுரை என்பது பொருள். சிறந்த அறிவுரைகளைக் கூறுவதால் இந்நூல் மூதுரை எனப் பெற்றது. இந்நூலில் முப்பத்தொரு பாடல்கள் உள்ளன.
மூதுரை – பெயர்க்காரணம் :
மூதுரை என்னும் சொல்லுக்கு மூத்தோர் கூறும் அறிவுரை என்பது பொருள். சிறந்த அறிவுரைகளைக் கூறுவதால் இந்நூல் மூதுரை எனப் பெயர் பெற்றது.
ஒளவையார் இயற்றிய நூல்கள் :
ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நல்வழி, மூதுரை.
ஔவையார் குறிப்பு எழுதுக :
ஔவையார் என்ற பெயரில் பல பெண்பாற் புலவர்கள் இருந்துள்ளனர். சங்க காலம், இடைக்காலம், சோழர் காலம், பிற்காலம் எனப் பல காலங்களில் ஒளவையார் என்ற பெயரில் பலர் வாழ்ந்துள்ளனர். அதியமானுக்கு நெல்லிக்கனி கொடுத்த ஔவையாரும் மூதுரை பாடிய ஔவையாரும் வெவ்வேறு காலத்தவர் ஆவர்.
8. பொருத்துக.
(a) மதியாதார் முற்றம் 1. கூடுவது கோடி பெறும்
(b) உபசரிக்காதார் மனையில் 2. மிதியாமை கோடிபெறும்
(c) குடிபிறந்தார் தம்மோடு 3. சொன்ன சொல் தவறாமை கோடி பெறும்
(d) கோடானு கோடி கொடுப்பினும் 4. உண்ணாமை கோடிபெறும்
(a) (b) (c) (d)
(A) 3 4 2 1
(B) 2 4 1 3
(C) 2 3 1 4
(D) 1 2 3 4
(E) விடை தெரியவில்லை
9. சரியான இணைகளைத் தேர்ந்தெடு.
1. பகுத்தறிவுக் கவிராயர் – உடுமலை நாராயணக்கவி
2. உவமைக் கவிஞர் – பெருஞ்சித்திரனார்
3. காந்தியக் கவிஞர் – வெ. இராமலிங்கனார்
4. புரட்சிக் கவிஞர் – தாரா பாரதி
(A) 1ம் மற்றும் 2ம் சரி
(B) 2ம் மற்றும் 3ம் சரி
(C) 1ம் மற்றும் 3ம் சரி
(D) 2ம் மற்றும் 4ம் சரி
(E) விடை தெரியவில்லை
ஆதாரம் 1: JAI HIND IAS ACADEMY TAMIL BOOK PAGE 221
உடுமலை நாராயணக்கவி
- இவரின் ஊர் = பொள்ளாச்சிக்கு அருகில் உள்ள பூளவாடி
- இவரின் குரு = உடுமலை முத்துசாமி கவிராயர்
- நீதிபதி கோகுலக்கிரிஷ்ணன் அவர்கள் தலைமையில் இவருக்கு “சாகித்ய ரத்னாகர் விருது” வழங்கப்பட்டது
- “கலைமாமணி” விருது பெற்றுள்ளார்
- தமிழக அரசு இவருக்கு அவர் ஊரில் நினைவு மண்டபம் எழுப்பியுள்ளது
- நாட்டுப்புறப் பாடல் மெட்டுகளைத் திரைப்படத்தில் அறிமுகம் செய்தவர்
- சீர்திருத்தக் கருத்துக்களைத் முதன் முதலில் திரைப்படத்தில் புகுத்தியவர்
- இவரை “பகுத்தறிவு கவிராயர்” எனப் போற்றுவர்.
ஆதாரம் 2: JAI HIND IAS ACADEMY TAMIL BOOK PAGE 221
நாமக்கல் கவிஞர்
வாழ்க்கைக்குறிப்பு:
- இயற் பெயர் = இராமலிங்கம் பிள்ளை
- பெற்றோர் = வேங்கடராம பிள்ளை, அம்மணி அம்மாள்
- ஊர் = நாமக்கல்
- காலம் = 19.10.1888-24.08.1972
சிறப்பு பெயர்கள்:
- நாமக்கல் கவிஞர்
- காந்தியக் கவிஞர்
- ஆஸ்தானக் கவிஞர்
- காங்கிரஸ் புலவர்
- புலவர் (விஜயராகவ ஆச்சாரியார்)
10. முடியரசன் இயற்றாத நூல் எது?
(A) பூங்கொடி
(B) நீலமேகம்
(C) வீரகாவியம்
(D) காவியப்பாவை
(E) விடை தெரியவில்லை
ஆதாரம்: JAI HIND IAS ACADEMY TAMIL BOOK PAGE No. 216
மரபு கவிதைகள்
முடியரசன்
வாழ்க்கைக் குறிப்பு:
- இயற் பெயர் = துரைராசு
- ஊர் = மதுரை அடுத்துள்ள பெரியகுளம்
- பெற்றோர் = சுப்புராயலு, சீதாலட்சுமி
வேறு பெயர்கள்:
- கவியரசு (குன்றக்குடி அடிகளார்)
- தமிழ்நாட்டு வானம்பாடி (அறிஞர் அண்ணா)
நூல்கள்:
- முகில் விடு தூது
- தாலாட்டுப் பாடல்கள்
- கவியரங்கில் முடியரசன்
- முடியரசன் கவிதைகள்
- பாடுங்குயில்
- காவியப்பாவை
- ஞாயிறும் திங்களும்
- மனிதனைத் தேடுகிறேன்
- பூங்கொடி (தமிழ் தேசிய காப்பியம், தமிழக அரசு பரிசு பெற்றது)
- வீரகாவியம் (தமிழ் வளர்ச்சி கழக பரிசு)
- நெஞ்சு பொறுக்குதில்லையே
11. ‘பெண் எனில் பேதை என்ற எண்ணம்
இந்த நாட்டில் இருக்கும் வரைக்கும்
உருப்படல் என்பது சரிப்படாது’ – எனப் பாடியவர்
(A) பாரதியார்
(B) பசுவய்யா
(C) பாரதிதாசன்
(D) நாமக்கல் கவிஞர்
(E) விடை தெரியவில்லை
12. ‘கல்வி இல்லாத பெண்கள் களர்நிலம்’ என்றவர்
(A) நாமக்கல் கவிஞர்
(B) சுரதா
(C) பாரதிதாசன்
(D) பாரதியார்
(E) விடை தெரியவில்லை
ஆதாரம் : JAI HIND IAS ACADEMY TAMIL BOOK
கசடற மொழிதல் > 1.2. குடும்ப விளக்கு
1. கல்வி இல்லாத பெண்கள்
களர்நிலம் அந்நி லத்தில்
புல்விளைந் திடலாம் நல்ல
புதல்வர்கள் விளைதல் இல்லை
கல்வியை உடைய பெண்கள்
திருந்திய கழனி அங்கே
நல்லறிவு உடைய மக்கள்
விளைவது நவில வோநான் !
2. வானூர்தி செலுத்தல் வைய
மாக்கடல் முழுது அளத்தல்
ஆனஎச் செயலும் ஆண்பெண்
அனைவர்க்கும் பொதுவே ! இன்று
நானிலம் ஆட வர்கள்
ஆணையால் நலிவு அடைந்து
போனதால் பெண்களுக்கு
விடுதலை போனது அன்றோ!
13. பொருத்துக.
(a) வெண்பா 1. துள்ளல் ஓசை
(b) ஆசிரியப்பா 2. தூங்கல் ஓசை
(c) கலிப்பா 3. செப்பல் ஓசை
(d) வஞ்சிப்பா 4. அகவல் ஓசை
(a) (b) (c) (d)
(A) 3 1 2 4
(B) 4 3 2 1
(C) 2 4 1 3
(D) 3 4 1 2
(E) விடை தெரியவில்லை
ஆதாரம்: JAI HIND IAS ACADEMY TAMIL BOOK பொதுத்தமிழ் – பயிற்சி PAGE No 169
பொருத்துக.
- வெண்பா – துள்ளல் ஓசை
- ஆசிரியப்பா – செப்பலோசை
- கலிப்பா – தூங்கலோசை
- வஞ்சிப்பா – அகவலோசை
விடை :- 1 – ஆ, 2 – ஈ, 3 – அ, 4 – இ
14. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிந்து எழுதுக.
‘கோல்டு பிஸ்கட்’
(A) வைரக்கட்டி
(B) அலுமினியக்கட்டி
(C) தங்கக்கட்டி
(D) தாமிரக்கட்டி
(E) விடை தெரியவில்லை
ஆதாரம் 1: JAI HIND IAS ACADEMY TAMIL BOOK பொதுத்தமிழ் – பயிற்சி Page 400
பிற மொழிச் சொல் தமிழ்ச்சொல்
கோல்டு பிஸ்கெட் தங்கக்கட்டி
பிஸ்கட் கட்டி
எக்ஸ்பெரிமெண்ட் சோதனை
ஆன்சரை விடையை, முடிவை
ஆல் தி பெஸ்ட் எல்லாம் நல்லபடி முடியட்டும்.
ஈக்குவலாக சமமாக
வெயிட் எடை
ரிப்பிட் மறுமுறை, மறுபடி
15. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லை அறிந்து பொருத்துக
(A) Vowel 1. மெய்யெழுத்து
(B) Consonant 2. ஒரு மொழி
(C) Homograph 3. உயிரெழுத்து
(D) Monolingual 4. ஒப்பெழுத்து
(a) (b) (c) (d)
(A) 1 3 2 4
(B) 3 4 1 2
(C) 2 4 3 1
(D) 3 1 4 2
(E) விடை தெரியவில்லை
ஆதாரம் : JAI HIND IAS ACADEMY TAMIL BOOK
பொதுத்தமிழ் – பயிற்சி Page 374
கலைச்சொல் அறிவோம்
Vowel – உயிரெழுத்து
Consonant – மெய்யெழுத்து
Homograph – ஒப்பெழுத்து
Monolingual – ஒரு மொழி
Conversation – உரையாடல்
Discussion – கலந்துரையாடல்
16. “குமரி கண்ட நோய்க்கு குமரி கொடு” – இதில் குமரி என்று அழைக்கப்படும் மூலிகை எது?
(A) கரிசலாங்கண்ணி
(B) தூதுவளை
(C) குப்பைமேனி
(D) சோற்றுக்கற்றாழை
(E) விடை தெரியவில்லை
ஆதாரம் 1: JAI HIND IAS ACADEMY TAMIL BOOK
கற்றாழை:
- இது வறண்ட நிலத்தாவரம்.
- இதனை “குமரி” என்பர்.
- பெண்களின் கருப்பை சார்ந்த நோய்களை நீக்குவதால் “குமரி கண்ட நோய்க்கு குமரி கொடு” என்பர்.
17. புறநானூற்றை முதன்முதலாக பதிப்பித்து வெளியிட்டவர்
(A) உ.வே.சா.
(B) ஜி.யு. போப்
(C) சீகன் பால்கு ஐயர்
(D) வீரமாமுனிவர்
(E) விடை தெரியவில்லை
ஆதாரம் 1: JAI HIND IAS ACADEMY TAMIL BOOK PAGE 150
புறநானூறு
- திணை = புறத்திணை
- பாவகை = ஆசிரியப்பா
- பாடல்கள் = 400
- புலவர்கள் = 157
- அடி எல்லை = 4-40
- புறம் + நான்கு + நூறு = புறநானூறு
- நூலின் பெயரிலேயே புறம் என்று புறத்திணைப் பாகுபாடு புலப்பட உள்ள நூல் இது மட்டுமே.
- புறத்திணை சார்ந்த நானூறு பாடல்கள் கொண்டதால் புறநானூறு எனப் பெயர் பெற்றது.
- புறம்
- புறப்பாட்டு
- புறம்பு நானூறு
- தமிழர் வரலாற்று பெட்டகம்
- தமிழர் களஞ்சியம்
- திருக்குறளின் முன்னோடி.
- தமிழ்க் கருவூலம்
- இந்நூலை தொகுத்தவர் தொகுப்பித்தவர் பெயர் தெரியவில்லை.
உரை, பதிப்பு:
- முதல் 266 பாடல்களுக்கு பழைய உரை உள்ளது.
- 267-400 பாடல்களுக்கு உ. வே. சா உரை உள்ளது.
- நூலினை முதலில் பதிப்பித்தவர் = உ. வே. சா
18. “மூன்றடிச் சிற்றெல்லையும் ஆறடிப் பேரெல்லையும் கொண்ட அகவற்பாக்களால் ஆன நூல் எது?
(A) குறுந்தொகை
(B) ஐங்குறுநூறு
(C) அகநானூறு
(D) நற்றிணை
(E) விடை தெரியவில்லை
ஆதாரம் 1: JAI HIND IAS ACADEMY TAMIL BOOK Page 141
ஐங்குறுநூறு
- திணை = அகத்திணை
- பாவகை = ஆசிரியப்பா
- பாடல்கள் = 500
- பாடியோர் = 5
- அடி எல்லை = 3 – 6
- ஐந்து + குறுமை + நூறு = ஐங்குறுநூறு
- குறுகிய அடிகளை கொண்டு ஐநூறு பாடல்களை கொண்டதால் ஐங்குறுநூறு எனப் பெயர் பெற்றது.
19. சரியான இணையைத் தேர்வு செய்க.
(A) துவரை – தாமரை மலர்
(B) மரை – பவளம்
(C) விசும்பு – வானம்
(D) மதியம் – நிலவு
(A) (a) மற்றும் (b) சரி
(B) (b) மற்றும் (c) சரி
(C) (c) மற்றும் (d) சரி
(D) (d) மற்றும் (a) சரி
(E) விடை தெரியவில்லை
ஆதாரம் 1: JAI HIND IAS ACADEMY TAMIL BOOK Page 325
இராவண காவியம்
I. சொல்லும் பொருளும்
- மைவனம் – மலைநெல்
- முருகியம் – குறிஞ்சிப்பறை
- பூஞ்சினை- பூக்களை
- உடைய கிளை
- சிறை – இறகு
- சாந்தம் – சந்தனம்
- பூவை- நாகணவாய்ப் பறவை
- பொலம்- அழகு
- கடறு – காடு
- முக்குழல்- கொன்றை, ஆம்பல், மூங்கில் ஆகியவற்றால் ஆன குழல்கள்;
- பொலி – தானியக்குவியல்
- உழை – ஒரு வகை மான்.
- கல் – மலை
- முருகு – தேன், மணம், அழகு
- மல்லல்- வளம்
- செறு- வயல்
- கரிக்குருத்து – யானைத்தந்தம்
- போர்- வைக்கோற்போர்
- புரைதப- குற்றமின்றி
- தும்பி- ஒருவகை வண்டு
- துவரை- பவளம்
- மரை – தாமரை மலர்
- விசும்பு- வானம்
- மதியம்- நிலவு
20. வெ. ராவுக்குப் ‘பெரியார்’ என்னும் பட்டமும், ‘தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ்’ என். பட்டமும் எங்கு எப்போது வழங்கப்பட்டது?
(A) 1929 நவம்பர் 18 – சென்னை, 27.06.1980 – அமெரிக்க பாராளுமன்றம்
(B) 1943 செப்டம்பர் 5 – சென்னை, 30.06.1970 – ரசியா செனட் சபை
(C) 1938 நவம்பர் 13 – சென்னை, 27.06.1970 – யுனெஸ்கோ மன்றம்
(D) 1928 டிசம்பர் 3 – சென்னை, 30.06.1975 – இங்கிலாந்து பாராளுமன்றம்
(E) விடை தெரியவில்லை
ஆதாரம் 1: JAI HIND IAS ACADEMY TAMIL BOOK
பொதுத்தமிழ் – பயிற்சி PAGE 348
- தந்தை பெரியார் பெண்ணினப் போர்முரசு என்று புகழப்பட்டார்
- பெரியாருக்குத் “தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ்” என்ற பட்டம் கொடுத்த அமைப்பு யுனெஸ்கோ
- பெரியார் எழுத்துச் சீர்திருத்தம் செயத உயிரெழுத்துகள் ஐ, ஒள ஆகும்
- சுயமரியாதை இயக்கத்தை பெரியார் தோற்றுவித்தார்
- அறிவியல் அடிப்படையில் பெரியாரின் சிந்தனைகள் அமைந்தவை
- மதங்கள் என்பது மனித சமூகத்தின் வாழக்கை நலத்திற்கு ஏற்படுத்தப்பட்டன.
- சமூக வளர்ச்சிக்குக் கல்வியை
மிகச்சிறந்த கருவியாகப் பெரியார் கருதினார்.
- ஒரு மொழியின் தேவை அதன் பயன்பாட்டு முறையை கொண்டே அமைகிறது.
- 1938- ல் சென்னை பெண்கள் மாநாட்டில் ஈ. வெ. ரா.வுக்கு
பெரியார் பட்டம் வழங்கியது.
21. நடனக்கலையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட திருநங்கை
(A) பாலசரஸ்வதி
(B) வைஜெயந்திமாலா
(C) தஞ்சை கிட்டப்பா
(D) நர்த்தகி நடராஜ்
(E) விடை தெரியவில்லை
22. பொங்கற் புதுநாளின் மாண்பினை எந்த இதழ் மூலம் அண்ணா விளக்கினார்?
(A) தினத்தந்தி
(B) காஞ்சி
(C) முரசொலி
(D) தினமணி
(E) விடை தெரியவில்லை
23. கவிஞர் மு. மேத்தாவுக்கு சாகித்திய அகாதெமி விருது எந்த நூலுக்காக வழங்கப்பட்டது?
(A) கண்ணீர்ப்பூக்கள்
(B) ஊர்வலம்
(C) ஆகாயத்துக்கு அடுத்த வீடு
(D) சோழநிலா
(E) விடை தெரியவில்லை
ஆதாரம் 1: JAI HIND IAS ACADEMY TAMIL BOOK Page 229
மு.மேத்தா
குறிப்பு:
- இயற்பெயர் = முகமது மேத்தா
- ஊர் = பெரியகுளம்
- இவர் கல்லூரிப் பேராசரியர்
கவிதை நூல்கள்:
- கண்ணீர்ப்பூக்கள்
- ஊர்வலம் (தமிழக அரசு பரிசு)
- அவர்கள் வருகிறார்கள்
- நடந்த நாடகங்கள்
- காத்திருந்த காற்று
- திருவிழாவில் ஒரு தெருப்பாடகன்
- இதயத்தில் நாற்காலி
- ஒருவானம் இரு சிறகு
- மனச்சிறகு
- நனைத்தவன நாட்கள்
- ஆகாயத்தில் அடுத்த வீடு (சாகித்ய அகாடமி விருது)
- நாயகம் ஒரு காவியம்
- காற்றை மிரட்டிய சருகுகள்
24. ‘கேள்’ என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தை தேர்ந்தெடுக்க.
(A) கேட்டு
(B) கேட்ட
(C) கேட்டல்
(D) கேட்டான்
(E) விடை தெரியவில்லை
25. ‘தணிந்தது’ என்ற சொல்லின் வேர்ச்சொல்லை எடுத்து எழுதுக.
(A) தணி
(B) தணிந்த
(C) தணிந்து
(D) தனி
(E) விடை தெரியவில்லை
26. ‘தருக’ என்ற சொல்லின் வேர்ச்சொல்லைக் கண்டறிந்து எழுதுக.
(A) தந்த
(B) தரு
(C) தா
(D) தந்து
(E) விடை தெரியவில்லை
27. ‘சோ’ – ஓரெழுத்து ஒருமொழிக்கு உரிய பொருளைக் கண்டறிந்து எழுதுக.
(A) அரசன்
(B) வறுமை
(C) மதில்
(D) நோய்
(E) விடை தெரியவில்லை
ஆதாரம் 1: JAI HIND IAS ACADEMY TAMIL BOOK
ஓரெழுத்து ஒருமொழி | பொருள் |
அ | அழகு, சிவன், திருமால், எட்டு, சுட்டு, அசை, திப்பிலி |
ஆ | ஆசாரம், அற்பம், மறுப்பு, நிந்தை, துன்பம், வியப்பு, இரக்கம், ஓர் இனம், சொல், வினா, விட சொல், பசு, ஆன்மா, வரை, நினைவு, உடன்பாடு |
இ | அன்மைச்சுட்டு, இங்கே, இவன் |
ஈ | அம்பு, அழிவு, இந்திரவில், சிறுபறவை, குகை, தாமரை, இதழ், திருமகள், நாமகள், தேன், வண்டு, தேனீ, நரி, பாம்பு, பார்வதி, கொடு |
உ | சிவபிரான், நான்முகன், உமையாள், ஒரு சாரியை, ஓர் இடைச்சொல், சுட்டெழுத்து |
ஊ | உணவு, இறைச்சி, திங்கள், சிவன், ஊன், தசை |
எ | குறி, வினா எழுத்து |
ஏ | ஓர் இடைச்சொல், சிவன், திருமால், இறுமாப்பு, அம்பு, விளிக்குறிப்பு, செலுத்துதல் |
ஐ | அசைநிலை, அரசன், அழகு, இருமல், கடவுள், கடுகு, குரு, கோழை, சர்க்கரை, கண்ணி, சிவன், கிழங்கு, தலைவன், தும்பை, துர்க்கை, பருந்து, தந்தை |
ஓ | ஒழிவு, மதகு, உயர்வு, இழிவு, கழிவு, இரக்கம், மகிழ்ச்சி, வியப்பு, நினைவு, அழைத்தல், ஐயம், நான்முகன் |
ஓள | பாம்பு, நிலம், விளித்தல், அழைத்தல், வியப்பு, தடை, கடிதல் |
க | அரசன், நான்முகன், தீ, ஆன்மா, உடல், காமன், காற்று, கதிரவன், செல்வன், திருமால், தொனி, நமன், மயில், மனம், மணி, இயமன், திங்கள், உடல், நலம், தலை, திரவியம், நீர், பறவை, ஒளி, முகில் |
கா | அசைச்சொல், காத்தல், காவடி, சோலை, துலை, தோட்சுமை, பூந்தோட்டம், பூங்காவனம், பூ, கலைமகள், நிறை, காவல், செய், வருத்தம், பாதுகாப்பு, வலி |
கீ | கிளிக்குரல், தடை, தொனி, நிந்தை, பாவம், பூமி |
கு | குற்றம், சிறுமை, தடை, தொடை, நிந்தை, பாவம், பூமி, இகழ்ச்சி, நீக்குதல், இன்மை, நிறம், நீக்கம் |
கூ | பூமி, நிலம், பிசாசு, அழுக்கு, கூகை, கூக்குரல் |
கை | இடம், ஒப்பனை, ஒழுக்கம், உடன், காம்பு, கிரணம், செங்கல், கட்சி, கைமரம், விசிறிக்காம்பு, படை உறுப்பு, கைப்பொருள், ஆற்றல், ஆள், உலகு, திங்கள், வரிசை, செய்கை, செயல், பகுதி, பிடிப்பு, முறை, வரிசை, கரம், சாயம், தோள், பாணி, வழக்கம், தங்கை, ஊட்டு |
கோ | அம்பு, அரசன், வானம், ஆண்மகன், உரோமம், எழுத்து, கண், ஓரெழுத்து, கிரணம், சந்திரன், சூரியன், திசை, நீர், பசு, தாய், வாணி, மேன்மை, வெளிச்சம், தந்தை, தலைமை |
கௌ | கொள்ளு, தீங்கு |
சா | பேய், இறப்பு, சோர்தல், சாதல் |
சீ | அடக்கம், அலட்சியம், காந்தி, கலைமகள், உறக்கம், பார்வதி, பெண், ஒளி, விடம், விந்து, கீழ் |
சு | ஓசை, நன்மை, சுகம் |
சே | மரம், உயர்வு, எதிர்மறை, எருது, ஒலிக்குறிப்பு, சிவப்பு, மரம், காளை, சேரான் |
சோ | அரண், உமை, நகர், வியப்புசொல் |
ஞா | கட்டு, பொருந்து |
த | குபேரன், நான்முகன் |
தா | அழிவு, குற்றம், கேடு, கொடியான், தாண்டுதல், பாய்தல், பகை, நான்முகம், வலி, வருத்தம், வியாழன், நாசம் |
தீ | அறிவு, இனிமை, தீமை, நரகம், நெருப்பு, சினம், நஞ்சு, ஞானம், கொடுமை |
து | அசைத்தல், அனுபவம், எரித்தல், கொடுத்தல், சேர்மானம், நடத்தல் |
தூ | சீ, சுத்தம், தசை, வகை, வெண்மை, தூய்மை, வலிமை |
தே | கடவுள், அருள், கொள்கை, தெய்வம், நாயகன், மாடு |
தை | ஒரு திங்கள், அலங்காரம், மரக்கன்று |
நா | அயல், சுவாலை, மணி, நாக்கு, வளைவு |
நீ | இன்மை, அதிகம், சமிபம், நிறைவு, உறுதி, ஐயம், வன்மை, விருப்பம், உபயம் |
நு | தியானம், தோணி, நிந்தை, நேசம், புகழ் |
நூ | எள், யானை, ஆபரணம் |
நெ | கனிதல், நெகிழ்தல், வளர்தல், மெலிதல், பிளத்தல் |
நே | அன்பு, அருள், நேயம் |
நொ | துன்பம், நோய், வருத்தம் |
நோ | இன்மை, சிதைவு, துக்கம், துன்பம், பலவீனம், நோய், இன்பம் |
ப | காற்று, சாபம், பெருங்காற்று |
பா | அழகு, நிழல், பரப்பு, பரவுதல், பாட்டு, தூய்மை, காப்பு, கைமரம், பாம்பு, பஞ்சு, நூல் |
பி | அழகு |
பூ | அழகு, இடம், இருக்குதல், இலை, கூர்மை, தாமரை, தீப்பொறி, பிறப்பு, புட்பம், பூமி, பொலிவு, மலர், நிறம், புகர், மென்மை |
பே | ஏவல் |
பை | அழகு, குடர், சாக்கு, நிறம், பசுமை, பச்சை, நிறம், மெத்தனம், இளமை, உடல், வில், உடல் |
போ | ஏவல் |
ம | இயமன், மந்திரம், காலம், சந்திரன், சிவன், நஞ்சு, நேரம் |
மா | அசைச்சொல், அழகு, அழைத்தல், அளவு, அறிவு, ஆணி, இடை, மரம், கட்டு, கருப்பு, குதிரை, பன்றி, யானை, சரஸ்வதி, சீலை, செல்வம், தாய், துகள், நிறம், வயல், வலி |
மீ | ஆகாயம், உயர்ச்சி, மகிமை, மேற்புறம், மேலிடம் |
மூ | மூப்பு, மூன்று |
மே | அன்பு, மேம்பாடு |
மை | இருள், எழு, கறுப்பு, குற்றம், செம்மறியாடு, நீர், மலடி, மேகம், வெள்ளாடு, தீவினை, மதி, கருநிறம் |
மோ | மோத்தல் |
யா | ஐயம், இல்லை, யாவை, கட்டுதல், அகலம் |
வா | ஏவல் |
வி | நிச்சயம், பிரிவு, வித்தியாசம், ஆகாயம், கண், காற்று, திசை, பறவை, அழகு, விசை, விசும்பு |
வீ | சாவு, கொல்லுதல், நீக்கம், பறவை, பூ, மோதல், மகரந்தம், விரும்புதல் |
வே | வேவு, ஒற்று |
வை | கூர்மை, புள், வைக்கோல், வையகம் |
28. ‘மா’ – என்னும் ஓரெழுத்து ஒருமொழிக்கு உரிய பொருளைக் கண்டறிந்து எழுதுக.
(A) பெரிய
(B) சிறிய
(D) நிரம்ப
(C) குறைய
(E) விடை தெரியவில்லை
ஆதாரம் 1: JAI HIND IAS ACADEMY TAMIL BOOK
ஓரெழுத்து ஒருமொழி | பொருள் |
அ | அழகு, சிவன், திருமால், எட்டு, சுட்டு, அசை, திப்பிலி |
ஆ | ஆசாரம், அற்பம், மறுப்பு, நிந்தை, துன்பம், வியப்பு, இரக்கம், ஓர் இனம், சொல், வினா, விட சொல், பசு, ஆன்மா, வரை, நினைவு, உடன்பாடு |
இ | அன்மைச்சுட்டு, இங்கே, இவன் |
ஈ | அம்பு, அழிவு, இந்திரவில், சிறுபறவை, குகை, தாமரை, இதழ், திருமகள், நாமகள், தேன், வண்டு, தேனீ, நரி, பாம்பு, பார்வதி, கொடு |
உ | சிவபிரான், நான்முகன், உமையாள், ஒரு சாரியை, ஓர் இடைச்சொல், சுட்டெழுத்து |
ஊ | உணவு, இறைச்சி, திங்கள், சிவன், ஊன், தசை |
எ | குறி, வினா எழுத்து |
ஏ | ஓர் இடைச்சொல், சிவன், திருமால், இறுமாப்பு, அம்பு, விளிக்குறிப்பு, செலுத்துதல் |
ஐ | அசைநிலை, அரசன், அழகு, இருமல், கடவுள், கடுகு, குரு, கோழை, சர்க்கரை, கண்ணி, சிவன், கிழங்கு, தலைவன், தும்பை, துர்க்கை, பருந்து, தந்தை |
ஓ | ஒழிவு, மதகு, உயர்வு, இழிவு, கழிவு, இரக்கம், மகிழ்ச்சி, வியப்பு, நினைவு, அழைத்தல், ஐயம், நான்முகன் |
ஓள | பாம்பு, நிலம், விளித்தல், அழைத்தல், வியப்பு, தடை, கடிதல் |
க | அரசன், நான்முகன், தீ, ஆன்மா, உடல், காமன், காற்று, கதிரவன், செல்வன், திருமால், தொனி, நமன், மயில், மனம், மணி, இயமன், திங்கள், உடல், நலம், தலை, திரவியம், நீர், பறவை, ஒளி, முகில் |
கா | அசைச்சொல், காத்தல், காவடி, சோலை, துலை, தோட்சுமை, பூந்தோட்டம், பூங்காவனம், பூ, கலைமகள், நிறை, காவல், செய், வருத்தம், பாதுகாப்பு, வலி |
கீ | கிளிக்குரல், தடை, தொனி, நிந்தை, பாவம், பூமி |
கு | குற்றம், சிறுமை, தடை, தொடை, நிந்தை, பாவம், பூமி, இகழ்ச்சி, நீக்குதல், இன்மை, நிறம், நீக்கம் |
கூ | பூமி, நிலம், பிசாசு, அழுக்கு, கூகை, கூக்குரல் |
கை | இடம், ஒப்பனை, ஒழுக்கம், உடன், காம்பு, கிரணம், செங்கல், கட்சி, கைமரம், விசிறிக்காம்பு, படை உறுப்பு, கைப்பொருள், ஆற்றல், ஆள், உலகு, திங்கள், வரிசை, செய்கை, செயல், பகுதி, பிடிப்பு, முறை, வரிசை, கரம், சாயம், தோள், பாணி, வழக்கம், தங்கை, ஊட்டு |
கோ | அம்பு, அரசன், வானம், ஆண்மகன், உரோமம், எழுத்து, கண், ஓரெழுத்து, கிரணம், சந்திரன், சூரியன், திசை, நீர், பசு, தாய், வாணி, மேன்மை, வெளிச்சம், தந்தை, தலைமை |
கௌ | கொள்ளு, தீங்கு |
சா | பேய், இறப்பு, சோர்தல், சாதல் |
சீ | அடக்கம், அலட்சியம், காந்தி, கலைமகள், உறக்கம், பார்வதி, பெண், ஒளி, விடம், விந்து, கீழ் |
சு | ஓசை, நன்மை, சுகம் |
சே | மரம், உயர்வு, எதிர்மறை, எருது, ஒலிக்குறிப்பு, சிவப்பு, மரம், காளை, சேரான் |
சோ | அரண், உமை, நகர், வியப்புசொல் |
ஞா | கட்டு, பொருந்து |
த | குபேரன், நான்முகன் |
தா | அழிவு, குற்றம், கேடு, கொடியான், தாண்டுதல், பாய்தல், பகை, நான்முகம், வலி, வருத்தம், வியாழன், நாசம் |
தீ | அறிவு, இனிமை, தீமை, நரகம், நெருப்பு, சினம், நஞ்சு, ஞானம், கொடுமை |
து | அசைத்தல், அனுபவம், எரித்தல், கொடுத்தல், சேர்மானம், நடத்தல் |
தூ | சீ, சுத்தம், தசை, வகை, வெண்மை, தூய்மை, வலிமை |
தே | கடவுள், அருள், கொள்கை, தெய்வம், நாயகன், மாடு |
தை | ஒரு திங்கள், அலங்காரம், மரக்கன்று |
நா | அயல், சுவாலை, மணி, நாக்கு, வளைவு |
நீ | இன்மை, அதிகம், சமிபம், நிறைவு, உறுதி, ஐயம், வன்மை, விருப்பம், உபயம் |
நு | தியானம், தோணி, நிந்தை, நேசம், புகழ் |
நூ | எள், யானை, ஆபரணம் |
நெ | கனிதல், நெகிழ்தல், வளர்தல், மெலிதல், பிளத்தல் |
நே | அன்பு, அருள், நேயம் |
நொ | துன்பம், நோய், வருத்தம் |
நோ | இன்மை, சிதைவு, துக்கம், துன்பம், பலவீனம், நோய், இன்பம் |
ப | காற்று, சாபம், பெருங்காற்று |
பா | அழகு, நிழல், பரப்பு, பரவுதல், பாட்டு, தூய்மை, காப்பு, கைமரம், பாம்பு, பஞ்சு, நூல் |
பி | அழகு |
பூ | அழகு, இடம், இருக்குதல், இலை, கூர்மை, தாமரை, தீப்பொறி, பிறப்பு, புட்பம், பூமி, பொலிவு, மலர், நிறம், புகர், மென்மை |
பே | ஏவல் |
பை | அழகு, குடர், சாக்கு, நிறம், பசுமை, பச்சை, நிறம், மெத்தனம், இளமை, உடல், வில், உடல் |
போ | ஏவல் |
ம | இயமன், மந்திரம், காலம், சந்திரன், சிவன், நஞ்சு, நேரம் |
மா | அசைச்சொல், அழகு, அழைத்தல், அளவு, அறிவு, ஆணி, இடை, மரம், கட்டு, கருப்பு, குதிரை, பன்றி, யானை, சரஸ்வதி, சீலை, செல்வம், தாய், துகள், நிறம், வயல், வலி |
மீ | ஆகாயம், உயர்ச்சி, மகிமை, மேற்புறம், மேலிடம் |
மூ | மூப்பு, மூன்று |
மே | அன்பு, மேம்பாடு |
மை | இருள், எழு, கறுப்பு, குற்றம், செம்மறியாடு, நீர், மலடி, மேகம், வெள்ளாடு, தீவினை, மதி, கருநிறம் |
மோ | மோத்தல் |
யா | ஐயம், இல்லை, யாவை, கட்டுதல், அகலம் |
வா | ஏவல் |
வி | நிச்சயம், பிரிவு, வித்தியாசம், ஆகாயம், கண், காற்று, திசை, பறவை, அழகு, விசை, விசும்பு |
வீ | சாவு, கொல்லுதல், நீக்கம், பறவை, பூ, மோதல், மகரந்தம், விரும்புதல் |
வே | வேவு, ஒற்று |
வை | கூர்மை, புள், வைக்கோல், வையகம் |
29. ‘பரவை’ – இச்சொல்லிற்குரிய பொருளைக் கண்டறிந்து எழுதுக.
(A) மலை
(B) கடல்
(C) ஆறு
(D) உயிர்வகை
(E) விடை தெரியவில்லை
ஆதாரம் 1: JAI HIND IAS ACADEMY TAMIL BOOK Page 304
- கடலைக் குறிக்கத் தமிழில் – ஆழி, ஆர்கலி, முந்நீர், வாரணம், பௌவம், பரவை, புணரி ஆகிய சொற்கள் உள்ளன.
30. உலகம், உயிர், கடவுள் ஆகிய மூன்றையும் ஒருங்கே காட்டும் காவியம் தான் பெரியபுராணம்” என்று கூறியவர் யார்?
(A) மகாவித்வான் மீனாட்சி சுந்தரனார்
(B) உ.வே. சாமிநாதனார்
(C) திரு.வி. கலியாண சுந்தரனார்
(D) ஆறுமுக நாவலர்
(E) விடை தெரியவில்லை
31. சரியான கூற்றுகளைத் தெரிவு செய்க.
இளங்கோவடிகள்
(A) சேர மரபைச் சார்ந்தவர்
(B) சிலப்பதிகாரத்தை இயற்றியவர்
(C) “அடிகள் நீரே அருள்க” என்ற கூற்றுக்குரியவர்
(D) “நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள்” என்று கூறியவர்
(A) அனைத்தும் சரி
(B) (a), (b) சரி
(C) (a), (c), (d) சரி
(D) அனைத்தும் தவறு
(E) விடை தெரியவில்லை
ஆதாரம் 1: JAI HIND IAS ACADEMY TAMIL BOOK Page 163
சிலப்பதிகாரம்
ஆசிரியர் குறிப்பு:
- பெயர் = இளங்கோவடிகள்
- பெற்றோர் = இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், சோழன் மகள் நற்சோனை
- அண்ணன் = சேரன் செங்குட்டுவன்
- இவர் இளமையிலே துறவு பூண்டு குணவாயிற் கோட்டம் என்னும் இடத்தில தங்கினார்.
32. கூற்று 1: சிலப்பதிகாரமும், மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் என
அழைக்கப்படுகின்றன.
கூற்று 2 : சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய இரண்டுமே 30 காதைகளைக்
கொண்டுள்ளன.
(A) கூற்று 1 மட்டும் சரி
(B) கூற்று 2 மட்டும் சரி
(C) கூற்று இரண்டும் சரி
(D) கூற்று இரண்டும் தவறு
(E) விடை தெரியவில்லை
ஆதாரம் 1: JAI HIND IAS ACADEMY TAMIL BOOK Page 164
சிலப்பதிகாரம்
நூல் அமைப்பு:
- காண்டங்கள் = 3 (புகர்ர் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம்)
- காதைகள் = 30
- முதல் காதை = மங்கல வாழ்த்துப் பாடல்
- இறுதி காதை = வரந்தருகாதை
ஆதாரம் 2: JAI HIND IAS ACADEMY TAMIL BOOK Page 166
மணிமேகலை
நூல் குறிப்பு:
- இந்நூலில் காண்டப் பிரிவு இல்லை.
- முப்பது காதைகள் மட்டும் உள்ளன.
- முதல் காதை = விழாவறைக் காதை
- இறுதி காதை = பவத்திறம் அறுக எனப் பாவை நோற்ற காதை
33. “வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின்” – திருக்குறள் உணர்த்தும் கருத்து.
(A) ஏற்றுமதி
(B) ஏமாற்றுதல்
(C) நேர்மை
(D) முயற்சியின்மை
(E) விடை தெரியவில்லை
ஆதாரம் 1: JAI HIND IAS ACADEMY TAMIL BOOK பொதுத்தமிழ் – பயிற்சி Page 70
வணிகரின் நேர்மை பற்றிய செய்திகள்
“வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின்” – திருக்குறள்
“நடுவு நின்ற நன்னெஞ்சினோர்” – பட்டினபாலை
34. கழுகுமலை வெட்டுவான் கோவில் சிற்பங்களை அமைத்தவர்கள் யார்?
(A) பல்லவர்கள்
(B) பாண்டியர்கள்
(C) சோழர்கள்
(D) நாயக்கர்கள்
(E) விடை தெரியவில்லை
ஆதாரம் 1: JAI HIND IAS ACADEMY TAMIL CULTURE BOOK Page 52
பாண்டியர் காலக் கோயில்கள்
பல்லவர்கள், தமிழகத்தின் வட பகுதியை ஆட்சி செய்து கொண்டிருந்த காலத்தில் தென் பகுதியைப் பாண்டியர்கள் ஆட்சி புரிந்து வந்தனர். செழியன்சேந்தன் காலம் முதல் வீரபாண்டியன் காலம் வரை அவர்கள் தோற்றுவித்த குடைவரைக் கோவில்கள், ஒற்றைக் கற்றளிகள், கட்டடக் கோயில்கள் ஆகியன பாண்டியர்கள் காலக் கட்டடக் கலைக்குச் சான்றுகளாக விளங்குகின்றன. தமிழகத்தில் பாண்டியர்களின் குடைவரைக் கோயில்கள் சிற்பங்கள் மிகுந்து அழகுடன் காணப்படுகின்றன. பிள்ளையார்பட்டி, மலையடிக்குறிச்சி, ஆனைமலை, திருப்பரங்குன்றம், குன்றக்குடி, திருமயம், குடுமியான்மலை, சித்தன்னவாசல், மகிபாலன்பட்டி, பிரான்மலை, அழகிய பாண்டியபுரம், மூவரைவென்றான் போன்ற ஊர்களில் பாண்டியர்கள்காலக் குடைவரைக் கோயில்களைக் காணலாம்.
கழுகுமலையில் உள்ள ‘வெட்டுவான் கோயில்’ பாண்டியரது ஒற்றைக் கற்றளிக்குச் சான்றாகும். இது மலையின் மேலிருந்து கீழ்நோக்கிக் குடைந்து அமைக்கப்பட்டுள்ளது. இது ‘தென்னகத்து எல்லோரா’ என்று அழைக்கப்படுகிறது. திருப்பத்தூர் திருக்கற்றளிநாதர் கோயில் பாண்டியர் காலக் கட்டடக்கலைக்குச் சிறந்த சான்றாகத் திகழ்கிறது.
35. புலவர்களால் எழுதப்பட்டுக் கல் தச்சர்களால் கல்லில் பொறிக்கப்பட்டவை
(A) ஓவிய எழினி
(B) சிற்பக்கலை
(C) மெய்க்கீர்த்தி
(D) பைஞ்சுதை
(E) விடை தெரியவில்லை
ஆதாரம் 1: JAI HIND IAS ACADEMY TAMIL BOOK பொதுத்தமிழ் – பயிற்சி Page 403
அழியாத கல் இலக்கியம் எனப் போற்றபடுவது மெய்க்கீர்த்தி
அரசர்கள் தங்கள் வரலாறும், பெருமையும் காலம் கடந்தும் நிலைக்க விரும்பினார்கள்
36. பொருத்துக
(a) தத்துவ தரிசனம் 1. அண்ணா
(b) பிடிசாம்பல் 2. வல்லிக்கண்ணன்
(c) தாலாட்டு 3. கி.வா. ஜகந்நாதன்
(D) மிட்டாய்காரன் 4. ஜெயகாந்தன்
சரியான விடையைத் தெரிவு செய்க
(a) (b) (c) (d)
(A) 3 1 4 2
(B) 4 3 2 1
(C) 4 2 1 3
(D) 2 1 4 3
(E) விடை தெரியவில்லை
37. சரியான தொடரைக் கண்டறிக.
(A) உலகம் தமிழ்மொழி வாழட்டும் உள்ளவரையிலும்
(B) தமிழ்மொழி உலகம் வாழட்டும் உள்ளவரையிலும்
(C) தமிழ் மொழி உலகம் உள்ள வரையிலும் வாழட்டும்
(D) உலகம் தமிழ்மொழி உள்ளவரையிலும் வாழட்டும்
(E) விடை தெரியவில்லை
38. சரியான தொடரைக் கண்டறிக.
(A) தம்பி படி சங்கத்தமிழ் நாலை என்று கூறினார் கவிஞர்
(B) என்று கவிஞர் கூறினார் சங்கத்தமிழ் நூலைப் படி
(C) நூலைப்படி கவிஞர் சங்கத்தமிழ் என்று கூறினார்
(D) “தம்பி, சங்கத்தமிழ் நூலைப்படி” என்று கவிஞர் கூறினார்
(E) விடை தெரியவில்லை
39. சரியான அகரவரிசையைத் தேர்க.
(A) மரகதம், மாணிக்கம், முத்து, கோமேதகம்
(B) கோமேதகம், மரகதம், மாணிக்கம், முத்து
(C) முத்து, மாணிக்கம், மரகதம், கோமேதகம்
(D) மரகதம், முத்து, மாணிக்கம், கோமேதகம்
(E) விடை தெரியவில்லை
40. பெயர்ச்சொற்களை அகரவரிசையில் எழுதுக.
(A) கிளி, தேனீ, தையல், பழம், மான், ஓணான், ஆசிரியர்
(B) ஆசிரியர், ஓணான், கிளி, தேனீ, தையல், பழம், மான்
(C) தேனீ, தையல், பழம், மான், ஓணான், ஆசிரியர், கிளி
(D) ஆசிரியர், கிளி, தேனீ, தையல், பழம், மான், ஓணான்
(E) விடை தெரியவில்லை
41. ‘தேடு’ – வினைமுற்று சொல்
(A) தேடிய
(B) தேடினார்
(C) தேடி
(D) தேடுதல்
(E) விடை தெரியவில்லை
42. வாயில் இலக்கியம் என அழைக்கப்படுவது
(A) தூது
(B) பள்ளு
(C) கலம்பகம்
(D) குறவஞ்சி
(E) விடை தெரியவில்லை
ஆதாரம் 1: JAI HIND IAS ACADEMY TAMIL BOOK தமிழ் கேள்வி பதில்கள் Page 119
தூதுவின் வேறு பெயர்கள் என்ன என்ன?
வாயில் இலக்கியம், சந்து இலக்கியம்
43. ஆண்பால் பிள்ளைத்தமிழுக்கும் பெண்பால் பிள்ளைத் தமிழுக்கும் பொதுவான பருவங்கள் எத்தனை?
(A) பத்து
(B) ஆறு
(C) ஏழு
(D) ஐந்து
(E) விடை தெரியவில்லை
ஆதாரம் 1: JAI HIND IAS ACADEMY TAMIL BOOK Page 185
பிள்ளைத்தமிழ்
- முதல் பிள்ளைத்தமிழ் நூல் = ஒட்டக்கூத்தரின் குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ்
- பெரியவர்களை குழந்தையாக பாவித்து பாடுதல் ஆகும்
- இதனை “பிள்ளை கவி, பிள்ளைப் பாட்டு” எனவும் கூறுவர்
- இது இரு வகைப்படும் = ஆண் பால் பிள்ளைத்தமிழ், பெண்பால் பிள்ளைத்தமிழ்
- பிள்ளைத்தமிழ் பாடாமல் விலக்கு அளிக்கப்பட்ட கடவுள் = சிவன்
ஆண் பால் பிள்ளைத்தமிழ் பருவங்கள்:
- காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர்.
பெண்பாற் பிள்ளைத்தமிழ் பருவங்கள்:
- காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, அம்மானை, கழங்கு (நீராடல்), ஊசல்.
தமிழ் கேள்வி பதில்கள் Page 26
பிள்ளைத்தமிழ் எந்த வகை இலக்கியம்?
சிற்றிலக்கியம்
பிள்ளைத்தமிழில் யாரை பாட்டுடைத்தலைவராகப் பாடுபவர்?
இறைவன், தலைவன், அரசன் குழந்தையாக கருதி பாடுவர்
பாட்டுடைதலைவரின் செயற்கரிய செயல்களை எடுத்தியம்புவது எது?
பிள்ளைத்தமிழ்
பிள்ளைத்தமிழ் எத்தனை வகைப்படும்?
ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற்பிள்ளைத்தமிழ்
பிள்ளைத்தமிழ் எத்தனை பாடல்களால் ஆனது?
100 பாடல்கள், 10 பருவம் – பருவத்திற்கு10 பாடல்கள்
குமரகுருபரரின் காலம் என்ன?
17 ஆம் நூற்றாண்டு
குமரகுருபரர் எந்த மொழிகளில் புலமை பெற்றவர்?
தமிழ், வடமொழி, இந்துஸ்தானி
குமரக்குருபரர் இயற்றிய நூல்கள் யாவை?
கந்தர் கலிவெண்பா, மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ், மதுரைக் கலம்பகம், சகலகலாவல்லி மாலை, நீதிநெறி விளக்கம், திருவாரூர் மும்மணிக்கோவை
இருபாலருக்கும் பொதுவான பருவங்கள் யாவை?
காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி
44. உழவர் உழத்தியரது வாழ்க்கையில் நிகழும் நிகழ்ச்சிகளை எளிய நடையில் வெளிப்படுத்தும் சிற்றிலக்கிய வகை எது?
(A) கலம்பகம்
(B) பள்ளு
(C) குறவஞ்சி
(D) உலா
(E) விடை தெரியவில்லை
ஆதாரம் 1: JAI HIND IAS ACADEMY TAMIL BOOK Page 183
பள்ளு
- இதனை “உழத்திப்பாட்டு, பள்லேசல்” என்றும் கூறுவர்
- இது உழவர் வாழ்வை சித்தரித்து கூறும்
- இது மருத நில நூலாக கருதப்படுகிறது
- பாவகை = சிந்தும் விருத்தமும் பரவி வர பாடப்படும்
- இது கோலாட்டமாக பாடப்படும் என்கிறார் டி. கே. சி
- பள்ளு இலக்கியத்தை “உழத்திப்பாட்டு” எனக் கூறியவர் = வீரமாமுனிவர்
45. அம்புஜத்தம்மாள் எழுதிய நூல்
(A) இராமலிங்க சுவாமிகள் சரிதம்
(B) மதி பெற்ற மைனர் –
(C) முப்பெண்மணிகள் வரலாறு
(D) நான் கண்ட பாரதம்
(E) விடை தெரியவில்லை
ஆதாரம் 1: JAI HIND IAS ACADEMY TAMIL BOOK
இந்திய விடுதலைப் போரில்
தமிழகப் பெண்களின் பங்கு
- அம்புஜத்தம்மாள்: இவர் 1899ஆம் ஆண்டு பிறந்தார்.
- இவர் அன்னை கஸ்துரிபாயின் எளிமையான தோற்றத்தினால் கவரப்பட்டு எளிமையாக வாழ்ந்தார்.
- இவர் பாரதியாரின் பாடல்களை பாடி விடுதலை உணர்வை ஊட்டினார்.
- இவர் “காந்தியடிகளால் தத்தெடுக்கப்பட்ட மகள்” என்று அலைகபடுபவர்.
- தன் தந்தையின் பெயரோடு காந்தியடிகளின் பெயரையும் இணைத்து “சீனிவாச காந்தி நிலையம்” என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கினார்.
- இவர் தம் எழுபதாண்டு நினைவாக, “நான் கண்ட பாரதம்” என்ற நூலை எழுதினார்.
- 1964ஆம் ஆண்டு இவருக்கு “தாமரைத்திரு “ (பத்ம ஸ்ரீ) விருது வழங்கப்பட்டது.
46. பெரிய புராணம் எந்த நாட்டின் நீர் வளத்தை சிறப்பிக்கின்றது?
(A) சேர நாடு
(B) சோழ நாடு
(C) பாண்டிய நாடு
(D) கலிங்க நாடு
(E) விடை தெரியவில்லை
ஆதாரம் 1: JAI HIND IAS ACADEMY TAMIL BOOK
பெரியபுராணம்
- உத்தம சோழப் பல்லவன்
- தொண்டர் சீர் பரவுவார்
- தெய்வப்புலவர்
- இராமதேவர்
- மாதேவடிகள்
- இவர் அநபாய சோழனிடம் அமைச்சராக இருந்தவர்.
- சோழனின் மனதை சீவக சிந்தாமணி நூலில் இருந்து சைவத்தின் பக்கம் திருப்ப சேக்கிழார் பெரியபுராணத்தை படைத்தார்.
- “இறைவனே சேக்கிழாருக்கு “உலகெலாம்” என அடி எடுத்து கொடுக்க பாடினார்.
- தமிழின் முதல் களஆய்வு நூல் பெரியபுராணம்
- தமிழின் இரண்டாவது தேசியக் காப்பியம்
- மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை படைத்த “சேக்கிழார் பிள்ளைத்தமிழ்” நூலில் “பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவ” எனச் சிறப்பிக்கிறார்.
- “சேக்கிழார் புராணம்” பாடியவர் = உமாபதி சிவம்
- சிவஞான முனிகள், “எங்கள் பாக்கியப் பயனாகிய குன்றை வாழ் சேக்கிழான் அடி சென்னி இருத்துவாம்” என கூறுகிறார்.
- பெரியபுராணத்தை உலக பொது நூல் என்கிராட் தெ. பொ. மீனாட்சி சுந்தரனார்
47. பத்துப்பாட்டு எட்டுத்தொகை ஆகிய இரண்டு தொகுதிகளையும் அச்சிட்டு அளித்தவர்
(A) மெய்யப்பர்
(B) உ.வே. சாமிநாதனார்
(C) இலக்குவனார்
(D) மீனாட்சி சுந்தரனார்
(E) விடை தெரியவில்லை
ஆதாரம் 1: JAI HIND IAS ACADEMY TAMIL BOOK Page 272
சிறப்பு பெயர்கள்:
- “தமிழ்த் தாத்தா” (கல்கி)
- மகாமகோபாத்தியாய (சென்னை ஆங்கில அரசு)
- குடந்தை நகர் கலைஞர் (பாரதி)
- பதிப்பு துறையின் வேந்தர்
- திராவிட வித்ய பூஷணம் (பாரத தருமா மகா மண்டலத்தார்)
- தட்சினாத்திய கலாநிதி (சங்கராச்சாரியார்)
- டாக்டர் (சென்னைப் பல்கலைக்கழகம்)
குறிப்பு:
- இவர் பதிபித்த முதல் நூல் = வேனுலிங்க விலாசச் சிறப்பு
- இவர் பதிபித்த முதல் காப்பியம் = சீவக சிந்தாமணி
- இவர் பதிபித்த மொத்த நூல்கள் = 87
48. டாக்டர். ரா.பி. சேதுப்பிள்ளை எழுதிய ஆய்வு நூல்
(A) உரைநடைக்கோவை
(B) தமிழிலக்கிய வரலாறு
(C) கதையும் கற்பனையும்
(D) ஊரும் பேரும்
(E) விடை தெரியவில்லை
ஆதாரம் 1: JAI HIND IAS ACADEMY TAMIL BOOK Page 262
ரா.பி.சேதுப்பிள்ளை
வாழ்க்கைக்குறிப்பு:
- ஊர் = நெல்லை மாவட்டம் ராசவல்லிபுரம்
- பெற்றோர் = பெருமாள் பிள்ளை, சொர்ணத்தம்மாள்
சிறப்புபெயர்கள்:
- சொல்லின் செல்வர்
- செந்தமிழுக்கு சேதுபிள்ளை
படைப்புகள்:
- தமிழின்பம் (சாகித்ய அகாடமி விருது பெற்ற முதல் தமிழ் நூல்)
- ஊரும் பேரும்
- செந்தமிழும் கொடுந்தமிழும்
- வீரமாநகர்
- வேலும் வில்லும்
- திருவள்ளுவர் நூல் நயம்
- சிலப்பதிகார நூல் நயம்
- தமிழ் விருந்து
- தமிழர் வீரம்
- கடற்கரையிலே
- தமிழ்நாட்டு நவமணிகள்
- வாழ்கையும் வைராக்கியமும்
- இயற்கை இன்பம்
- கால்டுவெல் ஐயர் சரிதம்
- Tamil words and their significance
49. தமிழ் பயிலும் ஆர்வம்மிக்க மாணவர்களுக்குத் தம்முடைய இல்லத்திலேயே தமிழ் கற்பித்ததுடன், அவர்களை இயற்றமிழ் மாணவர் எனவும் பெயரிட்டு அழைத்தவர்
(A) மறைமலையடிகள்
(B) சங்கரதாசு சுவாமிகள்
(C) பரிதிமாற் கலைஞர்
(D) பம்மல் சம்பந்தனார்
(E) விடை தெரியவில்லை
50. தொல்லியல் ஆய்வு நடைபெற்ற ஆதிச்சநல்லூர் எந்த மாவட்டத்தைச் சார்ந்தது?
(A) மதுரை
(B) கரூர்
(C) தூத்துக்குடி
(D) கன்னியாக்குமரி
(E) விடை தெரியவில்லை
ஆதாரம் 1: JAI HIND IAS ACADEMY TAMIL BOOK தமிழ் கேள்வி பதில்கள் Page 49
கொற்கையில் நடந்த சிறப்பான தொழில் எது?
முத்துக் குளித்தல்
தூத்துக்குடியில் எங்கு முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன?
ஆதிச்சநல்லூர்
51. இலக்கணக் குறிப்பறிதல்.
சாலச் சிறந்தது – தொடரின் வகையை அறிக.
(A) இடைச்சொல் தொடர்
(B) விளித் தொடர்
(C) எழுவாய்த் தொடர்
(D) உரிச்சொல் தொடர்
(E) விடை தெரியவில்லை
ஆதாரம் 1: JAI HIND IAS ACADEMY TAMIL BOOK Page 21
சால, தவ என்னும் உரிச்சொற்களின் பின் வரும் வல்லினம் மிகும்
எடுத்துக்காட்டு:
தவ + பெரிது = தவப்பெரிது
சால + சிறந்தது = சாலச்சிறந்தது
ஆதாரம் 2: JAI HIND IAS ACADEMY TAMIL BOOK பொதுத்தமிழ் – பயிற்சி PAGE 81
உரிச்சொல்
பெயர்ச்சொல், வினைச்சொல் ஆகியவற்றின் தன்மையை மிகுதிப்படுத்த வருவது உரிச்சொல் ஆகும்.
(எ.கா) மா – மாநகரம்
சால – சாலச்சிறந்தது
52. பெயர்ச்சொற்களைப் பொருத்துக.
(A) மல்லிகை 1. சினைப்பெயர்
(B) பள்ளி 2. பண்புப்பெயர்
(C) கிளை 3. இடப்பெயர்
(D) இனிமை 4. பொருள்பெயர்
(a) (b) (c) (d)
(A) 4 3 1 2
(B) 3 4 2 1
(C) 4 3 2 1
(D) 2 3 1 4
(E) விடை தெரியவில்லை
ஆதாரம் 1: JAI HIND IAS ACADEMY TAMIL BOOK Page 40
பெயர்ச்சொல்லின் வகையறிதல்
பொருட் பெயர்
பொருட்களுக்கு இட்டு வழங்கப்பெரும் பெயர் பொருட்பெயர் ஆகும்.
எ.கா :
1. கணினி
2. மேசை
3. பேனா
இடப் பெயர்
இடப்பெயர் என்பது ஒன்றின் இடத்தைச் சுட்டுகின்ற பெயர் ஆகும்.
அங்கு, இங்கு, எங்கு போன்ற சொற்கள் “கு” உருபு ஏற்றுவருகின்ற இடப் பெயர்களுக்குப் பதில் சொற்களாக அமைந்து வருகின்றன.
எ.கா :
1. சேலம்
2. மதுரை
3. சென்னை
காலப் பெயர்
காலப் பெயர் என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தை உணர்த்தும் பெயர் ஆகும்.
எ.கா :
1. வினாடி
2. மணி
3. சித்திரை
சினைப் பெயர்
ஒரு பொருளின் உறுப்பினை குறிக்கும் பெயர் சினைப் பெயர் ஆகும். பொதுவாக சினை என்பதற்கு உறுப்பு என பொருள்படும்.
எ.கா :
1. காது
2. கண்
3. தண்டு
பண்புப் பெயர்
ஒரு பொருளின் பண்பை உணர்த்தும் பெயர் பண்புப் பெயர் ஆகும். பண்புப் பெயரானது நிறம், வடிவம், சுவை, குணம், அளவு ஆகியவற்றைப் பொருத்து அமையும். பண்புப் பெயரானது அதிகமாக மை விகுதி பெற்று அமையும்.
எ.கா :
1. வட்டம்
2. புளிப்பு
3. இனியன்
4. வெண்மை
தொழிற்பெயர்
ஒன்றின் தொழிலை உணர்த்தும் பெயர் தொழிற் பெயர் ஆகும். தொழிற்பெயரானது தல், அல், ஐ, அம் போன்ற விகுதியுடன் அமையும்.
எ.கா :
1. குளித்தல்
2. செயல்
3. செய்கை
4. உறங்குதல்
53. பொருத்தமற்ற பெயர்ச்சொற்களை எடுத்து எழுதுக.
(a) காலப்பெயர் – செம்மை
(b) சினைப்பெயர் – கண்
(c) பண்புப்பெயர் – ஆண்டு
(d) தொழிற்பெயர் – ஆடுதல்
(A) (a), (c)
(B) (a), (b)
(C) (c), (d)
(D) (a), (d)
(E) விடை தெரியவில்லை
ஆதாரம் 1: JAI HIND IAS ACADEMY TAMIL BOOK Page 40
பெயர்ச்சொல்லின் வகையறிதல்
பொருட் பெயர்
பொருட்களுக்கு இட்டு வழங்கப்பெரும் பெயர் பொருட்பெயர் ஆகும்.
எ.கா :
1. கணினி
2. மேசை
3. பேனா
இடப் பெயர்
இடப்பெயர் என்பது ஒன்றின் இடத்தைச் சுட்டுகின்ற பெயர் ஆகும்.
அங்கு, இங்கு, எங்கு போன்ற சொற்கள் “கு” உருபு ஏற்றுவருகின்ற இடப் பெயர்களுக்குப் பதில் சொற்களாக அமைந்து வருகின்றன.
எ.கா :
1. சேலம்
2. மதுரை
3. சென்னை
காலப் பெயர்
காலப் பெயர் என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தை உணர்த்தும் பெயர் ஆகும்.
எ.கா :
1. வினாடி
2. மணி
3. சித்திரை
சினைப் பெயர்
ஒரு பொருளின் உறுப்பினை குறிக்கும் பெயர் சினைப் பெயர் ஆகும். பொதுவாக சினை என்பதற்கு உறுப்பு என பொருள்படும்.
எ.கா :
1. காது
2. கண்
3. தண்டு
பண்புப் பெயர்
ஒரு பொருளின் பண்பை உணர்த்தும் பெயர் பண்புப் பெயர் ஆகும். பண்புப் பெயரானது நிறம், வடிவம், சுவை, குணம், அளவு ஆகியவற்றைப் பொருத்து அமையும். பண்புப் பெயரானது அதிகமாக மை விகுதி பெற்று அமையும்.
எ.கா :
1. வட்டம்
2. புளிப்பு
3. இனியன்
4. வெண்மை
தொழிற்பெயர்
ஒன்றின் தொழிலை உணர்த்தும் பெயர் தொழிற் பெயர் ஆகும். தொழிற்பெயரானது தல், அல், ஐ, அம் போன்ற விகுதியுடன் அமையும்.
எ.கா :
1. குளித்தல்
2. செயல்
3. செய்கை
4. உறங்குதல்
54. பண்டைக் காலத்தில் யோகம் பயின்று அறிவு நிரம்பியவர்கள்
(A) ஆழ்வார்கள்
(B) சித்தர்கள்
(C) நாயன்மார்கள்
(D) புலவர்கள்
(E) விடை தெரியவில்லை
ஆதாரம் : JAI HIND IAS ACADEMY TAMIL BOOK Page 188
சித்தர்கள்
- சித்துக்களைச் செய்ய வல்லவர்கள்
- சித்தர்கள் சித்துக்கள் எட்டு வகைப்படும்
- இவற்றை அட்டமா சித்திகள் என்பர்
- அட்டமா சித்துகளிலும் வல்ல சித்தர்களுக்குச் சாதிமத பேதமில்லை.
- ஆண்-பெண், மேல்-கீழ் என்னும் வேறுபாடுகள் இல்லை.
- சித்தர்கள் பதினெண்மர்- 18 சித்தர்களுள் திருமூலர் முதன்மையானவர்.
திருமூலர்:
- திருமந்திரம் இயற்றினார்
சிவவாக்கியர்:
- இவர் பாடிய பாடல்கள் 520 யோக சித்தர்.
- இவரது பாடல்கள் சிந்தனையையும் தெளிவையும் தர வல்லன.
ஓளவையார்:
- ஞானக்குறள் பாடினார்.
- வீடு பேறு பற்றி கூறினார்.
பட்டினத்தார்:
- பட்டினத்தார் நிலையாமையினை உணர்ந்த யோகி ஆவார்
பத்திரகிரியார்:
- துளுவ நாட்டு மன்னர் பட்டினத்தாரைக் கழுவேற்ற முயன்றபோது தோற்றார்.
- பட்டினத்தார்க்கே அடிமையாகி அரச இன்பங்களைத் துறந்தார்.
- இவரது பாடல்கள் பத்திரகிரியார் புலம்பல் எனப்படும்
பாம்பாட்டிச் சித்தர்:
- பாம்பு வடிவாக மண்டலித்து உள்ள குண்டலினி சக்தியை எழுப்பி அதன் மூலம் ஆன்ம தரிசனம் பெற இயலும் என்பது இவரது கொள்கை.
- ஆடு பாம்பே எனப் பாடியதால் பாம்பாட்டிச் சித்தர் எனப்பட்டார்.
- கொங்கு நாட்டு மருதமலையில் வாழ்ந்தார் என்பர்.
இடைக்காட்டுச் சித்தர்:
- கோனார் என வழங்கப்படும் இடையர்களையும், ஆடுமாடுகளையும் முன்னிறுத்திப் பாடியதால் இவருக்கு இப்பெயர் என்பர்.
- இடைக்காடு என்னும் ஊரினர் ஆதலால் இப்பெயர் என்றும் கூறுவர்.
கொங்கணச் சித்தரின் சீடர் அகப்பேய்ச் சித்தர்:
- அலையும் மனத்தைப் பேய் என உருவகித்தால் இவருக்கு இப்பெயர்.
- பேய்ப் மனத்தைப் பெண்ணாக விளித்துப்பாடுகிறார்.
குதம்பைச் சித்தர்:
- குதம்பை என்பது காதணி குதம்பை அணிந்த பெண்களை முன்னிலைப்படுத்திப் பாடியதால் இவருக்கு இப்பெயர்.
காடுவெளிச் சித்தர்:
- வாக்கு மனம் கடந்த பர வெளியைக் காடுவெளி எனப்பாடியதால் இவருக்கு இப்பெயர் பாடியன 34 கண்ணிகள்.
அழகணிச் சித்தர்:
- இவரது பாடல்கள் அழகும் அணிநயமும் மிகுந்து காணப்படுவதால் இவருக்கு இப்பெயர் பாமரர் நாவில் அழுகுணிச் சித்தர் என வழங்குவதாயிற்று.
கொங்கணச் சித்தர்:
- காலம் கி. பி. 7 கொங்கு நாட்டைச் சேர்ந்தவராதலால் இவருக்கு இப்பெயர்.
- இவர் இரகுவாதம், யோகம், மருத்துவம் பற்றிய நூல்களை எழுதியுள்ளார்.
சட்டைமுனி:
- சட்டை முனி ஆயிரத்து இரு நூறு திரிகாண்டம், சரக்கு வைப்பு, நவரத்தின வைப்பு முதலிய நூல்களை இயற்றியுள்ளார்.
அகத்தியர்:
- அகத்தியர் பலர்.
- அகத்தியச் சித்தர், சித்த மருத்துவ முறைகளை வகுத்தவர்களுள் முதன்மையானவராகக் கருதப்படுகிறார்.
சுப்பிரமணிய சித்தர்:
- இறைவனை முருகனாகவே காண்கிறார்.
- பல பாடல்களில் முருகனை “மயில் வீரன்‟ எனக் குறிப்பிடுகிறார்.
- வேல் முனையைத் தியானம் பண்ணிப் பாயவிட, மனதில் இருந்த அசுரர் கூட்டம் பறந்து போயிற்று என்கின்றார்.
போகர்:
- திருமூலரின் மாணாக்கரான காலங்கிநாதரின் மாணாக்கர் இவர்.
- போகர் ஏழாயிரம், போகர் திருமந்திரம், நிகண்டு பதினேழாயிரம் முதலான நூல்களை எழுதியுள்ளார்.
- உரோமுனி சித்தர்- இவரது உடலெங்கும் உரோமம் மிகுந்திருந்ததால் இவருக்கு இப்பெயர் காண்பர்.
- உரோம முனி ஞானம், உரோம முனி நூறு, உரோம முனி ஐந்நூறு, ஐம்புலநூல் ஆகியவை இவரது படைப்புகள்.
கருவூர்ச் சித்தர்:
- கருவூரில் பிறந்தவராதலால் இவருக்கு இப்பெயர்.
- தஞ்சையில் இராசராசன் கட்டிய கோயிலின் சிவலிங்கத்தை இவர் நிறுவினார் என்பர்.
தேரையர்:
- மன்னனின் தலைக்குள் இருந்த தேரையை அகற்றியதால் இவருக்கு இப்பெயர்.
- நோய் அணுகாவிதி, பதார்த்த குணசிந்தாமணி, வைத்திய சிந்தாமணி, கலை ஞானம் முதலான நூல்களை இயற்றியுள்ளார்.
55. ‘உழவர் பாட்டு’ என்று அழைக்கப்படும் நாட்டுப்புறப்பாட்டு
(A) தாலாட்டுப்பாட்டு
(B) கும்மிப் பாட்டு
(C) பள்ளுப்பாட்டு
(D) வில்லுப் பாட்டு
(E) விடை தெரியவில்லை
56. ‘வரதன்’ என்ற இயற்பெயரைக் கொண்டவர்
(A) நல்லாதனார்
(B) ஒட்டக்கூத்தர்
(C) காளமேகப் புலவர்
(D) குமரகுருபரர்
(E) விடை தெரியவில்லை
ஆதாரம் : JAI HIND IAS ACADEMY TAMIL BOOK Page 187
காளமேகப்புலவர்
- இயற் பெயர் = வரதன்
- பிறந்த ஊர் = கும்பகோணத்திற்கு அருகில் உள்ள “நந்திக்கிராமம்” எனவும், விழுப்புரம் மாவடத்தில் உள்ள “எண்ணாயிரம்” எனவும் கூறுவர்.
- “கார்மேகம் போல்” கவிதை பொழியும் ஆற்றல் பெற்றதால், இவர் “காளமேகப்புலவர்” என அழைக்கப் பெற்றார்.
- கரியமேகம் எவ்வாறு விடாது பெய்யுமோ, அதுபோல் “இம்” என்னும் முன்னே எழுநூறு கவிப்பாடும் ஆற்றல் மிக்கவர்.
- வசை பாட காளமேகம்
- வசைகவி
- ஆசுகவி
57. ‘மரமும் பழைய குடையும்’ – ஆசிரியர்
(A) பாரதிதாசன்
(B) அழகிய சொக்கநாதப் புலவர்
(C) காளமேகப்புலவர்
(D) புதுமைப்பித்தன்
(E) விடை தெரியவில்லை
ஆதாரம் : JAI HIND IAS ACADEMY TAMIL BOOK
6th Tamil Notes
குற்றாலக் குறவஞ்சி
சொற்பொருள்:
- வானரங்கள் – ஆண் குரங்குகள்
- மந்தி – பெண் குரங்குகள்
- வான்கவிகள் – தேவர்கள்
- காயசித்தி – இறப்பை நீக்கும் மூலிகை
- வேணி – சடை
- மின்னார் – பெண்கள்
- மருங்கு – இடை
நூல் குறிப்பு:
- இந்நூலின் முழுப்பெயர் திருக்குற்றாலக் குரவண்டி.
- ஆசிரியர், திருகூட ராசப்பக் கவிராயர் ஆவார்.
- குறவஞ்சி என்னும் இலக்கிய வகையைச் சார்ந்தது இந்நூல்.
- மரமும் பழைய குடையும்
சொற்பொருள்:
- கோட்டு மரம் – கிளைகளைஉடைய மரம்
- பீற்றல் குடை –பிய்ந்த குடை
ஆசிரியர் குறிப்பு:
- அழகிய சொக்கநாதப் புலவர் திருநெல்வேலி மாவட்டத்தில் தச்சநல்லூரில் பிறந்தவர்.
- இவரின் காலம் கி. பி. 19 ஆம் நூற்றாண்டு.
58. ‘நீலப் பொய்கையின் மிதந்திடும்
தங்கத் தோணிகள்’ – இக்கூற்று யாருடையது?
(A) அர்ச்சுனன்
(B) தருமன்
(C) சகாதேவன்
(D) நகுலன்
(E) விடை தெரியவில்லை
59. ஆற்றூர் பேச்சு வழக்கில் ____________ என மருவியுள்ளது.
(A) ஆம்பூர்
(B) அரூர்
(C) அரசூர்
(D) ஆத்தூர்
(E) விடை தெரியவில்லை
ஆதாரம் 1: JAI HIND IAS ACADEMY TAMIL BOOK Page 289
மருத நில ஊர்கள்:
ஊர், குடி, சோலை, பட்டி, குளம், ஏரி, ஊரணி |
- நிலவளமும், நீர்வளமும் பயிர்வலமும் செறிந்த மருதநிலக் குடியிருப்பும் “ஊர்” என வழங்கப்பட்டது.
- ஆறுகள் பாய்ந்த இடங்களில் “ஆற்றூர்” என வழங்கப்பட்ட பெயர்கள் காலப்போக்கில் “ஆத்தூர்” என மருவியது.
- மரங்கள் சூழ்ந்த பகுதிகளில் மரங்களின் பெயரோடு ஊர் பெயரை சேர்த்து வழங்கினர். (கடம்பூர், கடம்பத்தூர், புளியங்குடி, புளியஞ்சோலை, புளியம்பட்டி).
- குளம், ஏரி, ஊருணி ஆகிவற்றுடன் ஊர் பெயர்களி இணைத்து வழங்கினர். ( புளியங்குளம், வேப்பேரி, பேராவூரணி).
60. பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தவர்
(A) எம்.ஜி. இராமச்சந்திரன்
(B) மூதறிஞர் இராஜாஜி
(C) பெருந்தலைவர் காமராசர்
(D) கலைஞர் கருணாநிதி
(E) விடை தெரியவில்லை
ஆதாரம் 1: JAI HIND IAS ACADEMY TAMIL BOOK Page 287
பெருந்தலைவர் காமராஜர்
கல்விப் புரட்சி:
- காமராசர் காலத்தில் கட்டாயக் கல்வி நடைமுறைப்படுத்தப்பட்டது.
- “தெருதோரும் தொடக்கப்பள்ளி, ஊர் தோறும் உயர்நிலைப்பள்ளி” என்பதே அவரது நோக்கமாக அமைந்தது.
- பள்ளி வேலைநாட்களை 180இல் இருந்து 200ஆக உயாத்தினார்.
- தொடக்கப்பள்ளியில் மதிய உணவுத் திட்டம் இவரால் தொடங்கப்பட்டது.
- ஈராண்டுகளில் பள்ளிச் சீரமைப்பு மாநாடுகள் 133 நடத்தி, பல கொடி ரூபாய் மதிப்புள்ள நன்கொடைகள் பெற்று பள்ளிகளுக்கு தேவையான அடிப்படை பொருட்கள் வாங்கப்பட்டன.
- மருத்துவக்கல்லூரி முதலான தொழிற்கல்லூரிகளில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு வட்டியில்லாக் கடனளிக்க ஏற்பாடு செய்தார்.
61. தமிழ்ச் செய்யுள் கலம்பகம் என்னும் நூலை தொகுத்தவர்
(A) வீரமாமுனிவர்
(B) கால்டுவெல்
(C) ஜி.யு. போப்
(D) தேவநேயப்பாவாணர்
(E) விடை தெரியவில்லை
ஆதாரம் 1: JAI HIND IAS ACADEMY TAMIL BOOK Page 289
15. உலகளாவிய தழிழர்கள் சிறப்பும் பெருமையும் தமிழ்ப் பணியும்
ஜி. யு. போப்
- ஆங்கிலேயர்
- கி. பி. 1820 ஆம் ஆண்டு, கனடாவின் பிரின்ஸ் எட்வெர்ட் தீவு ஜான்போப்புக்கும், கெதரின் யுளாபுக்கும் மகனாகப்பிறந்தார்.
- பணியிடங்கள் – திருநெல்வேலி (சாயர்புரம்), சென்னை சாந்தோம், தஞ்சாவூர், உதகமண்டலம், பெங்களுர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக தமிழ், தெலுங்கு பேராசிரியர்
- தம் கல்லறையில், “தமிழ் மாணவன்” என எழுதப்பணித்தார்
- மகாவித்துவான் இராமானுசக் கவிராயரிடம் தமிழ் கற்றார்
- திருவாசகம், நாலடியார், திருக்குறள் (1886-ல்), சிவஞானபோதம், புறநானூறு, புறப்பொருள் வெண்பாமாலை ஆகிய நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்.
- தமிழ்ச் செய்யுள்களைத் தொகுத்து, “தமிழ்ச்செய்யுட் கலம்பகம்‟ என அச்சிட்டு வெளியிட்டார்.
62. வீறுடை செம்மொழி தமிழ்மொழி உலகம் வேரூன்றிய நாள் முதல் உயிர் மொழி என்று தமிழின் பெருமையைப் பறைசாற்றியவர்
(A) பாவலரேறு பெருஞ்சித்திரனார்
(B) தேவநேய பாவாணர்
(C) பரிதிமாற்கலைஞர்
(D) இளங்கோவடிகள்
(E) விடை தெரியவில்லை
ஆதாரம் 1: JAI HIND IAS ACADEMY TAMIL BOOK Page 257
8. தமிழின் தொண்மை – உயர்தனிச் செம்மொழி
பாவலரேறு பெருஞ்சித்திரனார்:
- “வீறுடை செம்மொழி தமிழ்மொழி உலகம்
வேரூன்றிய நாள்முதல் உயிர்மொழி”
என்று தமிழின் பெருமையைப் போற்றுகிறார் பெருஞ்சித்திரனார்.
63. சதுரகராதி என்னும் நூலை இயற்றியவர் யார்?
(A) ரா.பி. சேதுப்பிள்ளை
(B) சோமசுந்தர பாரதியார்
(C) குன்றக்குடி அடிகளார்
(D) வீரமாமுனிவர்
(E) விடை தெரியவில்லை
ஆதாரம் 1: JAI HIND IAS ACADEMY TAMIL BOOK Page 175
தேம்பாவணி
- பெயர் – வீரமாமுனிவர்
- இயற்பெயர் – கான்ஸ்டாண்டின் ஜோசப் பெஸ்கி
- பெற்றோர் – கொண்டல் போபெஸ்கி, எலிசபெத்
- பிறந்த ஊர் – இத்தாலி நாட்டில் காஸ்திக்கிளியோன்
- அறிந்த மொழிகள் – இத்தாலியம், இலத்தின், கிரேக்கம், எபிரேயம், தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம்
- தமிழ்க் கற்பித்தவர் – மதுரைச் சுப்ரதீபக் கவிராயர்
- சிறப்பு – முப்பதாம் வயதில் தமிழகம் வந்து தமிழ் பயின்று காப்பியம் படைத்தமை.
- இயற்றிய நூல்கள் – ஞானஉபதேசம், பரமார்த்த குரு கதை, சதுரகராதி, திருக்காவலூர்க் கலம்பகம், தொன்னூல் விளக்கம்
- காலம் – 1680-1747
ஆதாரம் 2: JAI HIND IAS ACADEMY TAMIL BOOK Page 277
அகரமுதலி வரலாறு
சதுரகராதி:
- வீரமாமுனிவரின் சதுரகராதியே தமிழில் தோன்றிய முதல் அகரமுதலி.
- இது கி.பி.1732ஆம் ஆண்டு வெளிவந்தது.
- சதுர் என்பதற்கு நான்கு என்று பொருள்.
- பெயர், பொருள், தொகை, தொடை என நான்கு வகைகளில் தனித்தனியாக பொருள் விளக்கம் இருந்தது.
- வீரமாமுனிவர் தமிழ்-இலத்தின் அகராதி, இலத்தின்-தமிழ் அகராதி, தமிழ்-பிரெஞ்சு அகராதி, பிரெஞ்சு-தமிழ் அகராதி, போர்த்துகீசிய-தமிழ்-பிரெஞ்சு அகராதி வெளியிட்டார்.
64. எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக.
‘கண்ணகி கட்டுரை எழுதாமல் இராள்’.
(A) உடன்பாட்டு வாக்கியம்
(B) எதிர்மறை வாக்கியம்
(C) பொருள் மாறா எதிர்மறை வாக்கியம்
(D) கலவை வாக்கியம்
(E) விடை தெரியவில்லை
65. கட்டளைத் தொடர் அல்லாத ஒன்றைக் கண்டறிக.
(A) அண்ணனோடு போ
(B) கூடு கட்டு
(C) தமிழ்ப்படி
(D) அரசு ஆணை பிறப்பித்தது
(E) விடை தெரியவில்லை
ஆதாரம் 1: JAI HIND IAS ACADEMY TAMIL BOOK Page 52
கட்டளை வாக்கியம்
பிறரை ஏவுகின்ற முறையிலும் கட்டளையிடும் முறையிலும் அமைந்து வருகின்ற வாக்கியம் கட்டளை வாக்கியம் எனப்படும்.
எ.கா
வரிசையில் செல், இங்கே வா.
66. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க.
ஐந்து மாடுகள் மேய்ந்தன.
(A) எத்தனை மாடுகள் மேய்ந்தன?
(B) எவ்வளவு மாடுகள் மேய்ந்தன?
(C) மாடுகள் மேய்ந்தனவா?
(D) ஐந்து மாடுகள் என்ன செய்கின்றன?
(E) விடை தெரியவில்லை
67. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க.
இங்கு நகரப் பேருந்து நிற்கும்
(A) நகரப்பேருந்து ஏன் நிற்கும்?
(B) நகரப்பேருந்து எப்போது நிற்கும்?
(C) இங்கு நகரப்பேருந்து நிற்குமா?
(D) இங்கு நகரப்பேருந்து வருமா?
(E) விடை தெரியவில்லை
68. சரியாக சரியான பதிலைத் தேர்வு செய்க
I. சூடிக்கொடுத்த சுடர்க்கொடி என அழைக்கப்படுபவர் ஆண்டாள்
II. விட்டுணு சித்தன் என்பவரின் வளர்ப்பு மகளே ஆண்டாள்
III. திருப்பாவைக்கு ஆண்டாள் வைத்த பெயர் சங்கத்தமிழ் மாலை முப்பது
IV. நாச்சியார் திருமொழி ஆண்டாள் பாடியது
(A) I, III, IV மட்டும் சரி
(B) I, II மட்டும் சரி
(C) I, II, III மட்டும் சரி
(D) அனைத்தும் சரி
(E) விடை தெரியவில்லை
ஆதாரம் 1: JAI HIND IAS ACADEMY TAMIL BOOK தமிழ் கேள்வி பதில்கள் Page 149
நாச்சியார் திருமொழி
ஆண்டாள் பாடிய பாடல்கள் யாது?
திருப்பாவை, நாச்சியார் திருமொழி
இறைவனக்கு பாமாலையோடு பூமாலையும் சூடியவர் யார்?
ஆண்டாள்
நாச்சியார் திருமொழியில் எத்தனை பாடல்கள் உள்ளன?
ஆண்டாள் எவ்வாறு அழைக்கப்பட்டார்?
“சூடிக்கொடுத்த சுடர்க்கொடி”
திருமாலை வழிபட்டவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
ஆழ்வார்கள்
12 ஆழ்வார்களில் ஒரே பெண் ஆழ்வார் யார்?
ஆண்டாள்
69. பெருமாள் திருமொழியைப் பாடியவர் யார்?
(A) கம்பர்
(B) குலசேகரர்
(C) ஆண்டாள்
(D) பெரியாழ்வார்
(E) விடை தெரியவில்லை
ஆதாரம் 1: JAI HIND IAS ACADEMY TAMIL BOOK
எண் | பாடியோர் | நூல் | எண்ணிக்கை | பிரபந்தம் |
1 | பொய்கையாழ்வார் | முதல் திருவந்தாதி | 100 | 1 |
2 | பூதத்தாழ்வார் | இரண்டாம் திருவந்தாதி | 100 | 2 |
3 | பேயாழ்வார் | மூன்றாம் திருவந்தாதி | 100 | 3 |
4 | திருமழிசையாழ்வார் | நான்காம் திருவந்தாதி | 96 | 4 |
திருச்சந்த விருத்தம் | 120 | 5 | ||
5 | நம்மாழ்வார் | திருவிருத்தம் | 100 | 6 |
திருவாசிரியம் | 7 | 7 | ||
பெரிய திருவந்தாதி | 87 | 8 | ||
திருவாய்மொழி | 1102 | 9 | ||
6 | மதுரகவியாழ்வார் | திருப்பதிகம் | 11 | 10 |
7 | பெரியாழ்வார் | திருப்பல்லாண்டு | 137 | 11 |
பெரியாழ்வார் திருமொழி | 460 | 12 | ||
8 | ஆண்டாள் | நாச்சியார் திருமொழி | 143 | 13 |
திருப்பாவை (சங்கத்தமிழ் மாலை முப்பது) | 30 | 14 | ||
9 | திருமங்கையாழ்வார் | பெரிய திருமொழி | 1084 | 15 |
திருக்குறுந்தாண்டகம் | 20 | 16 | ||
திருநெடுந்தாண்டகம் | 30 | 17 | ||
திருவெழுகூற்றிருக்கை | 1 | 18 | ||
சிறிய திருமடல் | 1 | 19 | ||
பெரிய திருமடல் | 1 | 20 | ||
10 | தொண்டரடிப்பொடி ஆழ்வார் | திருமாலை | 145 | 21 |
திருப்பள்ளியெழுச்சி | 10 | 22 | ||
11 | திருப்பாணாழ்வார் | திருப்பதிகம் | 10 | 23 |
12 | குலசேகர ஆழ்வார் | பெருமாள் திருமொழி | 105 | 24 |
70. தான் பாடிய பதிகத்தில் எட்டாம் பாடலில் இராவணன் சிவபக்தன் ஆனதையும், ஒன்பதாம் பாடலில் பிரமனும் திருமாலும் தேடிக் காணா இறைவன் என்பதையும், பத்தாம் பாடலில் புறச்சமயப் போலிகளைத் தாக்கியும், பதினோராம் பாடலில் தம் பெருமை கூறியும் பாடியவர் யார்?
(A) சுந்தரர்
(B) திருஞானசம்பந்தர்
(C) அப்பர்
(D) மாணிக்கவாசகர்
(E) விடை தெரியவில்லை
ஆதாரம் 1: JAI HIND IAS ACADEMY TAMIL BOOK Page 200
TOPIC மாணிக்கவாசகர்
71. தொல்காப்பியம் குறிப்பிடும் “நிறை மொழி மாந்தர்” யார் ?
(A) தேவர்கள்
(B) அரசர்கள்
(C) சித்தர்கள்
(D) புலவர்கள்
(E) விடை தெரியவில்லை
ஆதாரம் 1: JAI HIND IAS ACADEMY TAMIL BOOK தமிழ் சமுதாய வரலாறு Page 130
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.
பொருள்:
பயன் நிறைந்த மொழிகளில் வல்ல சான்றோரின் பெருமையை, உலகத்தில் அழியாமல் விளங்கும் அவர்களுடைய மறைமொழிகளே காட்டிவிடும்.
72. எட்டாம் வகுப்பு வரை படித்த இளம் பெண்களுக்கான திருமண உதவித்தொன் யாருடைய பெயரில் தமிழக அரசால் வழங்கப்படுகிறது?
(A) சாரதா அம்மாள்
(B) மூவலூர் இராமாமிர்தம்
(C) முத்துலெட்சுமி
(D) பண்டித ரமாபாய்
(E) விடை தெரியவில்லை
ஆதாரம் 1: JAI HIND IAS ACADEMY TAMIL BOOK Page 295
மூவலூர் இராமாமிர்தம்
- பிறந்த ஊர்: நாகப்பட்டினம் மயிலாடுதுறை – மூவலூர் கிராமம் (1883-1962)
- தமிழகத்தின் அன்னிபெசன்ட் அம்மையா என்று அழைக்கபடுகிறார்.
- 1917 ம் ஆண்டு மயிலாடுதுறையில் தேவதாசி முறையின் கொடுமைகளைப் எதிர்த்து போரட்டத்தை தொடங்கினார்
- 1925 ல் பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்தார்
- இவர் எழுதிய தாசிகளின் மோசவலை (1936) என்னும் நூல் தேவதாசிகளின் அவலநிலையை எடுத்துக்கூறியது.
- அவர் வீட்டின்வெளியே ஓரு பலகையில், கதர் அணிந்தவார்கள் மட்டும் உள்ளே வரவும் என எழுதியது அவரின் விடுதலை போராட்ட உணர்வின் சான்றாகும்.
- மூவலூர் அம்மையாரின் நினைவைப் போற்றும் வகையில் 1989 ம் ஆண்டு முதல் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித்திட்டம் என்ற பெயரில் ஏழை பெண்களுக்கான திருமண உதவித் திட்டத்தினைத் தமிழக அரசு செயல் படுத்திவருகிறது.
73. ஆங்கிலேயரை எதிர்த்துப் போர் செய்த வேலுநாச்சியார் பிறந்த ஆண்டு எது?
(A) கி.பி. 1730
(B) கி.பி. 1880
(C) கி.பி. 1865
(D) கி.பி. 1800
(E) விடை தெரியவில்லை
ஆதாரம் 1: JAI HIND IAS ACADEMY TAMIL BOOK Page 174
2. வேலுநாச்சியார் (1730-1796)
- 1730 – இராமநாதபுரத்தின் அரசர் செல்லமுத்து சேதுபதிக்கு அரச குடும்பத்தின் ஒரே பெண் வாரிசாக பிறந்தார்.
திறமைகள்:
- வளரி, சிலம்பம், போர்க் கருவிகளில் பயிற்சி பெற்றிருந்தார்.
- மொழி: ஆங்கிலம், பிரெஞ்சு, உருது
- குதிரையேற்றம், வில்வித்தையிலும் திறமையானவராக இருந்தார்.
- 16 வயதில் சிவகங்கை மன்னரான முத்துவடுகநாதரை மணந்து வெள்ளச்சி நாச்சியார் என்ற பெண் மகளை பெற்றெடுத்தார்.
- 1772 இல் ஆற்காட்டு நவாபும் லெப்டினன்ட் கர்னல் பான்ஜோர் தலைமையிலான படைகளும் இணைந்து காளையார்கோவில் அரண்மணையைத் தாக்கிய போரில் முத்துவடுகநாதர் கொல்லப்பட்டார்.
- தன் மகளோடு வேலுநாச்சியார் தப்பிச்சென்று கோபால நாயக்கரின் பாதுகாப்பில் திண்டுக்கல் அருகே உள்ள விருப்பாட்சியில் எட்டு ஆண்டுகள் வாழ்ந்தார்.
- மறைந்து வாழ்ந்த காலத்தில் படைப்பிரிவை உருவாக்கி கோபால நாயக்கர், ஹைதர் அலியோடு கூட்டணி ஏற்படுத்திக்கொண்டார்.
- வேலுநாச்சியாரின் தளவாய் (இராணுவத்தலைவர்) தாண்டவராயனார் 5000 காலாட் படைகளும், 5000 குதிரைப் படைகளும் அனுப்பும்படி ஹைதர் அலிக்கு கடிதம் எழுதினார், ஹைதர் அலி தனது திண்டுக்கல் கோட்டை படைத்தலைவரான சையதிடம் இராணுவ உதவிகளை வழங்குமாறு ஆணையிட்டார்.
- 1780 – கோபால நாயக்கர், ஹைதர் அலியின் இராணுவ உதவியோடு சிவகங்கையை கைப்பற்றினார், ஆற்காடு நவாப் சிறைவைக்கப்பட்டார்.
- பிரிட்டிஷ் அதிகாரத்தை எதிர்த்த முதல் பெண் ஆட்சியாளர்/அரிசி என்ற பெருமை அவருக்கே உரித்ததானதாகும்.
- மருது சகோதரர்களின் துணையுடன் இராணியாக முடி சூடினார்.
- சின்ன மருது – ஆலோசகர்
- பெரிய மருது – படைத் தளபதி
- 1783 – மீண்டும் ஆங்கிலேயர் படையெடுத்தனர். மருது பாண்டியர்கள் சிவங்கங்கையின் பாதுகாப்பை உறுதி செய்தனர்.
- பிற்காலத்தில் ஆங்கிலேயரின் சமரச உடன்பாட்டின்படி வேங்கண் பெரிய உடைய தேவர் சிவங்ககை அரசர் ஆனார். இருவருக்கும் மணம் முடித்து வைக்கப்பட்ட வெள்ளச்சி நாச்சியார் 1790இல் இறந்தார்.
- 1796 – வேலு நாச்சியார் இறந்தார்.
உளவாளிகள்:
குயிலி – தன் மீது நெருப்பு வைத்துக்கொண்டு, ஆங்கிலேயரின் வெடிமருந்து கிடங்கில் நுழைந்து அதை அழித்தார். (1780)
உடையாள் – குயிலி பற்றி உளவு கூறமறுத்ததால் கொல்லப்பட்ட மேய்த்தல் தொழில்புரிந்த பெண்.
74. தொல்காப்பியர் கூறும் உயிர்வகைகளுக்கான அறியும் ஆற்றலை வரிசைப்படுத்துக.
(A) உற்றறிதல், நுகர்தல், சுவைத்தல், கேட்டல், காணல், பகுத்தறிதல்
(B) உற்றறிதல், சுவைத்தல், நுகர்தல், காணல், கேட்டல், பகுத்தறிதல்
(C) உற்றறிதல், நுகர்தல், சுவைத்தல், காணல், கேட்டல், பகுத்தறிதல்
(D) உற்றறிதல், சுவைத்தல், நுகர்தல், கேட்டல், காணல், பகுத்தறிதல்
(E) விடை தெரியவில்லை
75. தமிழ் ஆட்சி மொழியாகத் திகழும் பிற நாடுகள்
(A) இலங்கை, சிங்கப்பூர், மலேசியா
(B) மொரிசியசு, இலங்கை , கனடா
(C) பிரிட்டன், பிஜித்தீவு, பினாங்குத்தீவு
(D) கனடா, அந்தமான், மலேசியா
(E) விடை தெரியவில்லை
76. நம்மாழ்வார் பிறந்த இடமான குருகூர் பழம்பெயரைத் துறந்து – எவ்வாறு அழைக்கப்படுகிறது?
(A) ஆழ்வார்திருநகர்
(B) ஆழ்வார்திருநகரி
(C) ஆழ்வார்பேட்டை
(D) திருநகரம்
(E) விடை தெரியவில்லை
ஆதாரம் 1: JAI HIND IAS ACADEMY TAMIL BOOK தமிழ் கேள்வி பதில்கள் Page 50
திருநெல்வேலிச் சீமையும் கவிகளும்
பாரதியார் பிறந்த இடம் எது?
எட்டையபுரம்
தேசிகவிநாயகர் பிறந்த இடம்?
கன்னியாகுமரி (நாஞ்சில் நாடு)
தேசிகவிநாயகர் கல்வி கற்ற இடம் எது?
திருநெல்வேலி
கோவில்பட்டியில் இருந்து சுமார் எட்டு கிலோமீட்டர் கிழக்கே அமைந்த ஊர் எது?
எட்டையபுரம்
வெங்கடேச எட்டப்ப ராசாவை பற்றி பாடல் இயற்றியவர் யார்?
கடிகைமுத்துப் புலவர்
தாமிரபரணியும் சிற்றாறும் கலக்கிற இடம் எது?
சீவலப்பேரி என்கிற முக்கூடல்
முக்கூடல் பற்றிய பிரபந்தம் எது?
முக்கூடல் பள்ளு
குடியானவர்களுக்கு சங்கீதம் எது?
இடிமுழக்கம்
குடியானவர்களுக்கு நடனம் எது?
மின்னல் வீச்சு
மதுரையில் இருந்து திருநெல்வேலிக்கு வந்த புலவர் யார்?
பலப்பட்டைச் சொக்கநாதப் புலவர்
நம்மாழ்வார் அவதரித்த தளம் எது?
ஆழ்வார் திருநகரி (திருக்குருகூர்)
77. உவமைத் தொடர் உணர்த்தும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
‘உள்ளங்கை நெல்லிக்கனி போல்’
(A) வெளிப்படைத் தன்மை
(B) வெளிப்படையற்ற தன்மை
(C) மறைத்து வைத்தல்
(D) தன்னலமின்மை
(E) விடை தெரியவில்லை
ஆதாரம் 1: JAI HIND IAS ACADEMY TAMIL BOOK Page 1
அங்கை நெல்லிக்கனி போல – உள்ளங்கையில் நெல்லிக்கனி வைத்தால் அது தெளிவாக தெரிவது போல
ஆதாரம் 2: JAI HIND IAS ACADEMY TAMIL BOOK Page 54.
19. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல்
- அகழ்வாரை தாங்கும் நிலம் போல் – பொறுமை, பொறுத்தல்
- அச்சில் வார்த்தாற் போல் – ஒரே சீராக
- அடியற்ற மரம் போல் – துன்பம், விழுதல், சோகம்
- அத்தி பூத்தாற் போல் – அறிய செல்வம்
- அரை கிணறு தாண்டியவன் போல் – ஆபத்து
- அலை ஓய்ந்த கடல் போல் – அமைதி, அடக்கம்
- அவளை நினைத்து உரலை இடித்தாற் போல் – கவனம்
- அழகுக்கு அழகு செய்வது போல் – மேன்மை
- அனலில் இட்ட மெழுகு போல் – வருத்தம், துன்பம்
- அனலில் விழுந்த புழுப்போல – தவிர்ப்பு
- இஞ்சி தின்ற குரங்கு போல் – துன்பம், வேதனை
- இடி ஓசை கேட்ட நாகம் போல் – அச்சம், மருட்சி, துன்பம்
- இடி விழுந்த மரம் போல் – வேதனை
- இணருழந்தும் நாறா மலரனையார் – விரித்துரைக்க இயலாதவர்
- இலைமறை காய் போல் – மறைபொருள்
- இழவு காத்த கிளி போல் – ஏமாற்றம், நினைத்தது கை கூடாமை
- உடுக்கை இழந்தவன் கைபோல் – நட்பு, உதவுதல்
- உமி குற்றிக் கைவருந்தல் போல – பயனற்ற செயல்
- உமையும், சிவனும் போல் – நெருக்கம், நட்பு
- உயிரும் உடம்பும் போல் – ஒற்றுமை, நெருக்கம், நட்பு
- உள்ளங்கை நெல்லிக்கனி போல் – தெளிவு
78. ‘சிலை மேல் எழுத்து போல’ இப்பழமொழி விளக்கும் பொருளைத் தேர்ந்தெடுக்க.
(A) தெளிவாகத் தெரியாது
(B) தெளிவாகத் தெரியும்
(C) நிலைத்து நிற்கும்
(D) நிலைத்து நிற்காது
(E) விடை தெரியவில்லை
ஆதாரம் 1: JAI HIND IAS ACADEMY TAMIL BOOK பொதுத்தமிழ் – பயிற்சி Page 415
உவமையைப் பயன்படுத்திச் சொற்றொடர் உருவாக்குக.
1. தாமரை இலை நீர்போல
பட்டினத்தார் வாழ்க்கை தாமரை இலைத் தண்ணீர்போல ஒட்டாதது துறந்தார்
2. மழைமுகம் காணாப் பயிர்போல
வெற்றியை எதிர்பார்த்து தோல்வி ஏற்பட்டதால் ரகு மழைமுகம் காணாப் பயிர்போல வாடி நின்றான்.
3. கண்ணினைக் காக்கும் இமை போல
பெற்றோர்கள் அவர்களின் பிள்ளைகளை கண்ணினைக் காக்கும் இமை போல பாதுகாத்து வளர்ப்பர்
4. சிலை மேல் எழுத்து போல
கவிஞர்களின் கவிதைகள் சிலை மேல் எழுத்து போல மனதில் பதிந்தது
79. ஒயிலாட்டத்தில் இரு வரிசையில் நின்று ஆடுகின்றனர்.
இத்தொடரின் செயப்பாட்டு வினைத் தொடர் எது?
(A) ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடுவர்
(B) ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடப்படுகிறது
(C) ஒயிலாட்டம் இரு வரிசையில் நின்று ஆடப்படுகிறது
(D) ஒயிலாட்டம் இருவரிசையில் நின்று ஆடப்படுகின்றனர்
(E) விடை தெரியவில்லை
80. மாலதி மாலையைத் தொடுத்தாள்.
இது எவ்வகை வாக்கியம்?
(A) செய் வினை
(B) செயப்பாட்டு வினை
(C) தன் வினை
(D) பிற வினை
(E) விடை தெரியவில்லை
81. பொருத்துக .
(a) சோறு 1. குடித்தான்
(b) பால் 2. உண்டான்
(c) பழம் 3. பருகினான்
(d) நீர் 4. தின்றான்
(a) (b) (c) (d)
(A) 1 3 4 2
(B) 3 4 1 2
(C) 2 3 4 1
(D) 4 1 2 3
(E) விடை தெரியவில்லை
ஆதாரம் 1: JAI HIND IAS ACADEMY TAMIL BOOK பொதுத்தமிழ் – பயிற்சி page 175
வினை மரபு
சோறு உண்
தண்ணீர் குடி
பூக் கொய்
முறுக்குத் தின்
பால் பருகு
இலை பறி
சுவர் எழுப்பு
கூடை முடை
பானை வனை
82. பொருத்துக.
(a) 876 1. ங சு கூ
(b) 543 2. ங உ க
(c) 321 3. ரு சு ங
(d) 369 4. அ எ சு
(a) (b) (c) (d)
(A) 2 4 1 3
(B) 4 1 3 2
(C) 4 3 2 1
(D) 3 2 1 4
(E) விடை தெரியவில்லை
ஆதாரம் 1: JAI HIND IAS ACADEMY TAMIL BOOK பொதுத்தமிழ் – பயிற்சி Page 182
தமிழ் எண்கள் அறிவோம். (விடுபட்ட கட்டங்களை நிரப்புக)
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
௧ | ௨ | ௩ | ௪ | ௫ | ௬ | ௭ | ௮ | ௯ | ௧0 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
௧ | ௧௨ | ௧௩ | ௧ ௪ | ௧௫ | ௧௬ | ௧ ௭ | ௧௮ | ௧௯ | ௧0 |
21 | 22 | 23௩ | 24 ௪ | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
௨௧ | ௨௨ | ௨௩ | ௨ ௪ | ௨௫ | ௨௬ | ௨ ௭ | ௨௮ | ௨௯ | ௨0 |
83. தேசிய நூலக நாளைத் தேர்வு செய்க
(A) ஆகஸ்டு ஒன்பதாம் நாள்
(B) ஆகஸ்டு பத்தொன்பதாம் நாள்
(C) ஆகஸ்டு ஒன்றாம் நாள்
(D) டிசம்பர் பதினைந்தாம் நாள்
(E) விடை தெரியவில்லை
84. இராமலிங்க அடிகள் சென்னை கங்க தோட்டத்து முருகப்பெருமானின் மீது பாடிய பாடலின் தொகுப்பு —— நூலாகும்.
(A) இரட்டைமணிமாலை
(B) மும்மணிக்கோவை
(C) தெய்வமணிமாலை
(D) முறைகண்டவாசகம்
(E) விடை தெரியவில்லை
85. ‘ஞானப்பச்சிலை’ என்று வள்ளலார் கூறும் மூலிகை எது?
(A) சிங்கவல்லி
(B) கீழாநெல்லி
(C) குப்பைமேனி
(D) வல்லாரை
(E) விடை தெரியவில்லை
86. ‘முந்நீர் வழக்கம் மகடூஉவொ டில்லை’ என்று கூறும் நூல்
(A) தொல்காப்பியம்
(B) மதுரைக்காஞ்சி
(C) பட்டினப்பாலை
(D) பதிற்றுப்பத்து
(E) விடை தெரியவில்லை
ஆதாரம் 1: JAI HIND IAS ACADEMY TAMIL BOOK Page 303
TOPIC 18. தமிழர் வணிகம், தொல்லியல் ஆய்வுகள், கடற்பயணங்கள் தொடர்பான செய்திகள்
- தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் இடம்பெற்றுள்ள ”முந்நீர் வழக்கம்” என்ற தொடர் தமிழரின் கடற்பயணத்தைக் கூறுகிறது.
87. பண்டைக்காலத்துத் துறைமுக நகரங்கள் பற்றிக் கூறும் நூல் –
(A) பட்டினப்பாலை
(B) தொல்காப்பியம்
(C) குறிஞ்சிப்பாட்டு
(D) திருக்குறள்
(E) விடை தெரியவில்லை
ஆதாரம் 1: JAI HIND IAS ACADEMY TAMIL BOOK Page 303
TOPIC 18. தமிழர் வணிகம், தொல்லியல் ஆய்வுகள், கடற்பயணங்கள் தொடர்பான செய்திகள்
- புகார் நகரத் துறைமுகத்தில் நிறுத்தப்பட்ட நாவாய்கள் அலைகள் மோதுவதால் தறியில் கட்டப்பட்ட யானைகள் அசைவது போல் அசைந்தன என்றும் அவற்றின் உச்சியில் கொடிகள் ஆடின என்றும் பட்டினப்பாலை கூறுகிறது.
- அக்காலத்தில் கப்பல் செய்யும் தொழிலாளர்கள் தமிழகத்தில் இருந்தனர்.
- அவர்களுக்குக் ”கலம் செய் இம்மியர்” என்று பெயர்.
- கலம் செய் இம்மியர்கள் பெரிய கோட்டையைப் போலக் கப்பல் கட்டினர்.
- மருத நிலத்தில் நான்கு பக்கமும் அகண்ட வயல் வெளிகள் உள்ளன.
- நடுவே பெரிய கோட்டை நிற்கிறது.
- அதன் உச்சியில் கொடி அசைகிறது.
- இக்கோட்டையின் தோற்றம் நடுக்கடலில் செல்லும் கப்பல் போல் உள்ளது என்று புறநானூறு கூறுகிறது.
- துறைமுகங்கள் ஏற்றுமதிக்கும், இறக்குமதிக்கும் ஏற்ற துறைமுகங்கள் பல தமிழ்நாட்டில் இருந்தன.
- மூவேந்தர்களும் தங்கள் துறைமுகப்பட்டினங்களைச் சிறப்பாக உருவாக்கினார்.
- காவிரிப்பூம்பட்டினம், முசிறி, கொற்கை ஆகிய பண்டைக் காலத்தில் சிறப்புற்றிருந்த துறைமுகங்களாகும்.
- காவிரிப்பூம்பட்டினம் துறைமுகமாகவும், சோழநாட்டின் பண்டைய தலைநகரமாகவும் விளங்கியது.
- பட்டினப்பாக்கம் மருவூர்பாக்கம் என்ற இருபகுதிகளைக் கொண்டிருந்தது.
காவிரிப்பூம்பட்டினம் என்ற புகார் நகரம்:
- பட்டினப்பாக்கம் கடற்கரையை ஒட்டிய பகுதியாகும்.
- இங்கு பெரும்பாலும் வணிகர்களே வாழ்ந்தனர்.
- காவிரிப்பூம்பட்டினத்தில் சுங்கச்சாவடியும் கலங்கரை விளக்கமும் இருந்ததாகப் பட்டினப்பாலை என்ற நூல் கூறுகிறது.
88. கீழ்கண்டவற்றுள் சரியான பழமொழியைக் கண்டறிக.
(A) தெய்வம் ஒன்று, நினைக்கும் நாம் ஒன்று நினைக்க.
(B) நாம் ஒன்று நினைக்க, ஒன்று நினைக்கும் தெய்வம்.
(C) நாம் ஒன்று நினைக்க, தெய்வம் ஒன்று நினைக்கும்.
(D) தெய்வம் நினைக்கும் ஒன்று. நாம் ஒன்று நினைக்க
(E) விடை தெரியவில்லை
ஆதாரம் 1: JAI HIND IAS ACADEMY TAMIL BOOK Page 71
TOPIC 21. பழமொழிகள்
பழமொழி 570. நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும்.
89. மோனைத் தொடை _____ வகைப்படும்.
(A) ஆறு
(B) எட்டு
(C) ஐந்து
(D) மூன்று
(E) விடை தெரியவில்லை
ஆதாரம் 1: JAI HIND IAS ACADEMY TAMIL BOOK Page 57
TOPIC 20. எதுகை மோனை இயைபு இவற்றுள் ஏதுனும் ஒன்றைத் தேர்ந்தெழுதுதல்
மோனைத்தொடை:
- முதல் எழுத்து ஒன்றி வருவது
- ஓர் எழுத்துக்கு மோனையாக அதன் இன எழுத்தும் வரலாம்.
அடிமோனை:
- செய்யுள் முதல் அடியின் முதல் எழுத்து அடுத்த அடிகளின் முதல் எழுத்தாக வருவது அடிமோனை ஆகும்.
- இன எழுத்தும் மோனையாக அமையும்.
எ.கா:
நாணால் உயிரைத் துறப்பார்
நாண் துறவார்
சீர்மோனை:
1. இணை மோனை:
- அளவடியில் 1, 2 சீர்கள் முதல் எழுத்து ஒன்றி வருவது
- இன எழுத்தும் மோனையாக அமையும்
எ.கா: கமழத் கமழத் தமிழிசை பாடினாள்.
2. பொழிப்பு மோனை:
- அளவடியில் 1, 3 சீர்களில் முதல் எழுத்து ஒன்றி வருவது
எ.கா: நண்பற்றா ராகி நயமில் செய்தார்க்கும்
3. ஒருஉ மோனை
- அளவடியில் 1, 4 சீர்களில் முதல் எழுத்து ஒன்றி வருவது.
எ.கா: அணியன்றோ நானுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல்
4. கூழை மோனை
- அளவடியில் 1, 2, 3 சீர்களில் முதல் எழுத்து ஒன்றி வருவது.
எ.கா.: எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்
5. மேற்கதுவாய் மோனை
- அளவடியில் 1, 3, 4 சீர்களில் முதல் எழுத்து ஒன்றி வருவது.
எ.கா. பாவை விளக்கும் பலவுடன் பரப்புமின்
6. கீழ்க்கதுவாய் மோனை
- அளவடியில் 1, 2, 4 சீர்களில் முதல் எழுத்து ஒன்றி வருவது
எ.கா.: அவிர்மதி அனைய திருநுதல் அரிவை
7. முற்று மோனை:
- அளவடியில் 1, 2, 3, 4 சீர்களிலும் முதல் எழுத்து ஒன்றி வருவது முற்றுமோனை எனப்படும்.
- அனைத்துச் சீர்களிலும் மோனை இருக்கும்.
எ.கா. கண்ணும் கருத்துமாய் கலைகளைக் கற்றான்
90. புனிதமுற்று மக்கள் புது வாழ்வு வேண்டில்
புத்தகசாலை வேண்டும் நாட்டில் யாண்டும்.
– இப்பாடலடிகளில் அமைந்துள்ள மோனைச் சொற்களை எழுதுக.
(A) வாழ்வு, வேண்டில்
(B) புனிதமுற்று, புத்தகசாலை
(C) நாட்டில், யாண்டும்
(D) மக்கள், புதுவாழ்வு
(E) விடை தெரியவில்லை
91. நனந்தலை உலகம் வளைஇ நெமியோடு
வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை’
என வரும் முல்லைப்பாட்டில் இடம் பெற்று நனந்தலை உலகம்’ என்பதற்கு எதிர்ச்சொல்?
(A) அகன்ற உலகம்
(B) மேலான உலகம்
(C) சிறிய உலகம்
(D) கீழான உலகம்
(E) விடை தெரியவில்லை
ஆதாரம் 1: JAI HIND IAS ACADEMY TAMIL BOOK பொதுத்தமிழ் – பயிற்சி Page 375
உயிரின் ஓசை > 2. 3. முல்லைப்பாட்டு
I. சொல்லும் பொருளும்
நனந்தலை உலகம் – அகன்ற உலகம்
நேமி – வலம்புரிச்சங்கு
கோடு – மலை
கொடுஞ்செலவு – விரைவாகச் செல்லுதல்
நறுவீ – நறுமணமுடைய மலர்கள்
தூஉய் – தூவி
விரிச்சி – நற்சொல்
சுவல் – தோள்
92. எடுப்பு – எதிர்ச்சொல் தருக.
(A) தொடங்குதல்
(B) முடித்தல்
(C) நிற்றல்
(D) ஏற்றல்
(E) விடை தெரியவில்லை
ஆதாரம் 1: JAI HIND IAS ACADEMY TAMIL BOOK Page 255
பேச்சுக்கலை
எடுத்தல்:
- பேச்சை தொடங்குவது எடுப்பு.
- தொடக்கம் நன்றாக இராவிட்டால் கேட்பவர்களுக்குப் பேச்சினை குறித்த நல்லெண்ணம் தோன்றாது.
- சுருக்கமான முன்னுரையுடன் தொடங்க வேண்டும்.
93. ‘தண்டளிர்ப்பதம்’ இச்சொல்லைச் சரியாகப் பிரித்திடும் முறையைத் தேர்வு செய்க.
(A) தண் + அளிர் + பதம்
(B) தன்மை + தளிர் + பதம்
(C) தண்மை + தளிர் + பதம்
(D) தண்ட ளிர் + பதம்
(E) விடை தெரியவில்லை
ஆதாரம் 1: JAI HIND IAS ACADEMY TAMIL BOOK – Old Book
சீறாப்புராணம்
பிரித்தறிதல்:
- பணிந்திவர் – பணிந்து + இவர்
- சிரமுகம் – சிரம் + முகம்
- பெருஞ்சிரம் – பெருமை + சிரம்
- தண்டளிர்ப்பதம் – தண்மை + தளிர் + பதம்
- திண்டிறல் – திண்மை + திறல்
- எண்கினங்கள் – எண்கு + இனங்கள்
- வீழ்ந்துடல் – வீழ்ந்து + உடல்
- கரிக்கோடு – கரி + கோடு
- பெருங்கிரி – பெருமை + கிரி
- இருவிழி – இரண்டு + விழி
- வெள்ளெயிறு – வெண்மை + எயிரு
- உள்ளுறை – உள் + உறை
- நெடுநீர் – நெடுமை + நீர்
- அவ்வழி – அ + வழி
- தெண்டிரை – தெண்மை + திரை
94. கலம்பகம் – இச்சொல்லைப் பிரித்து எழுதுக.
(A) கலம் + அகம்
(B) கலம் + பகம்
(C) கலம்பு + அகம்
(D) கல் + அம்பகம்
(E) விடை தெரியவில்லை
ஆதாரம் 1: JAI HIND IAS ACADEMY TAMIL BOOK – Page 181
கலம்பகம்
- பல்வகை வண்ணமும், மனமும் கொண்ட மலர்களால் கட்டப்பட்டக் கதம்பம் போன்று பல்வகை உறுப்புகளைக் கொண்டு அகம், புறமாகிய பொருட்கூறுகள் கலந்து வர பல்வகைச் சுவைகள் பொருந்தி வருவதால் ‘கலம்பகம்” எனப் பெயர் பெற்றது.
- கலம் + பகம் = கலம்பகம்
- கலம் = 12
- பகம் = 6
- கலம்பகம் 18 உறுப்புகளைக் கொண்டது.
- கலம்பகத்தின் இலக்கணம் கூறும் நூல் = பன்னிரு பாட்டியல்முதல் கலம்பக நூல் = நந்திக் கலம்பகம் (ஆசிரியர் பெயர் தெரியவில்லை)
“கன்பாய கலபகத்திற்கு இரட்டையர்கள்” எனக் கூறப்படும்
அந்தாதி தொடை அமையப் பாடப்படும் சிற்றிலக்கியம் கலம்பகம்
அகப்பொருளும் புறப்பொருளும் கலந்து பாடப்படும்
கதம்பம் என்பது கலம்பகம் என்று திரிந்ததாக கூறுவார் உ. வே. சா
95. ‘பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல்’ என்று குறிப்பிடும் நூல்
(A) கலித்தொகை
(B) பரிபாடல்
(C) அகநானூறு
(D) புறநானூறு
(E) விடை தெரியவில்லை
96. அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல் எது?
(A) நெடுந்தொகை
(B) திருக்குறள்
(C) முத்தொள்ளாயிரம்
(D) கம்பராமாயணம்
(E) விடை தெரியவில்லை
ஆதாரம் 1: JAI HIND IAS ACADEMY TAMIL BOOK Page 9
அடைமொழியால் குறிக்கப்பெறும் – நூல்
அகநானூறு | அகம் அகப்பாட்டு நெடுந்தொகை நெடுந்தொகை நானூறு நெடும்பாட்டு பெருந்தொகை நானூறு |
97. பொருத்தமான விடையைத் தருக.
(A) சிறுபஞ்சமூலம் 1. காப்பிய இலக்கியம்
(B) குடும்பவிளக்கு 2. சங்க இலக்கியம்
(C) சீவகசிந்தாமணி 3. அற இலக்கியம்
(D) குறுந்தொகை 4. தற்கால இலக்கியம்
(a) (b) (c) (d)
(A) 3 4 1 2
(B) 3 1 4 2
(C) 2 3 1 4
(D) 4 1 2 3
(E) விடை தெரியவில்லை
98. “இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே” எனப் பாடியவர்
(A) பாரதியார்
(B) சுரதா
(C) பாரதிதாசன்
(D) வாணிதாசன்
(E) விடை தெரியவில்லை
99. திருக்குறள் முதன் முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு
(A) 1832
(B) 1812
(C) 1842
(D) 1852
(E) விடை தெரியவில்லை
ஆதாரம் 1: JAI HIND IAS ACADEMY TAMIL BOOK தமிழ் கேள்வி பதில்கள் Page 130
திருக்குறள் முதன் முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு என்ன?
1812 ஆம் ஆண்டு
100. திருமணம் செல்வக்கேசவராயரால், ‘தமிழுக்கு கதியாவார் இருவர்’ என்று
குறிப்பிடப்படுபவர்கள்
(A) கம்பர், இளங்கோ
(B) கம்பர், திருவள்ளுவர்
(C) திருவள்ளுவர், இளங்கோ
(D) இளங்கோ , பாரதியார்
(E) விடை தெரியவில்லை
ஆதாரம் 1: JAI HIND IAS ACADEMY TAMIL BOOK Page 137
தமிழுக்கு கதி : கம்பர், திருவள்ளுவர்